DO OR DIE SITUATION GOVT WANT TO GIVE FARMERS LAND TO CAPITALISTS KEJRIWAL ATTACKS CENTRE IN MEERUT MUT
வாழ்வா சாவா சூழ்நிலை: விவசாயிகள் நிலங்களை முதலாளிகளுக்கு தாரை வார்க்க விரும்புகிறது மத்திய அரசு: கெஜ்ரிவால் காட்டம்
அரவிந்த் கெஜ்ரிவால்
கடந்த ஞாயிறன்று அவர் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு தன் ஆதரவை அவர்களுக்கு உறுதியளித்த கெஜ்ரிவால், 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கான மரண அறிவித்தல்கள் என்றார். மேலும் இவை கறுப்புச் சட்டங்கள் என்றார்.
வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுக்கே தன் ஆதரவு என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவரும் ஆன அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், இந்த 3 விவசாயச்சட்டங்களும், விவசாயிகளுக்கான மரண் உத்தரவாதங்களே என்றார் அவர்.
“மத்திய அரசு விவசாயிகளின் நிலங்களை அபகரித்து 3-4 கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தாரை வார்க்க விரும்புகிறது. தன் சொந்த நிலத்திலேயே அவர்கள் கூலிகளாக வேண்டிய துர்பாக்கிய நிலையே ஏற்படும். இதனால்தான் இது விவசாயிகளுக்கு வாழ்வா சாவா போராட்டமாகும்” என்று பேசினார் அரவிந்த் கேஜ்ரிவால்,
கடந்த ஞாயிறன்று அவர் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு தன் ஆதரவை அவர்களுக்கு உறுதியளித்த கெஜ்ரிவால், 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கான மரண அறிவித்தல்கள் என்றார். மேலும் இவை கறுப்புச் சட்டங்கள் என்றார்.
உத்தரப்பிரதேசத்தில் 2022 தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
சஞ்சய் சிங் கூறும்போது, “இந்த விவசாயிகளை மோடி போராட்ட ஜீவிஅகள் என்று பெயரிடுகிறார். ஆனால் போராட்ட ஜீவிகளுடன் இணைய வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். உ.பி.யில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் அவரது பேச்சைக் கேட்க வருகை தந்தனர்” என்றார்.
மேலும் கெஜ்ரிவால் பேசும்போது ஆதித்யநாத் அரசை மக்கள் அடுத்த தேர்தலில் விட்டெறிவார்கள், பாஜக இதைக்கண்டுதான் அஞ்சுகிறது என்றார்.
கடந்த நவம்பர் 26ம் தேதி முதல் விவசாயிகள் போராடி வருகின்றனர். பல சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்த நிலையில் மத்திய அரசு விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க பலதரப்பட்ட நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது.
இந்நிலையில்தான் விவசாயச் சட்டங்கள் கறுப்புச் சட்டங்கள் என்றும் அதை ஒழிக்க வேண்டும் என்றும் கெஜ்ரிவால் பேசியுள்ளார்.