Home /News /national /

கர்நாடகாவில் பர்தா அணிந்து வந்த மாணவிகளை பள்ளிக்குள் விட மறுப்பு

கர்நாடகாவில் பர்தா அணிந்து வந்த மாணவிகளை பள்ளிக்குள் விட மறுப்பு

கர்நாடகா உடுப்பியில் பர்தா அணிந்த முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு

கர்நாடகா உடுப்பியில் பர்தா அணிந்த முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு

கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் இஸ்லாமிய மாணவிகள், சீருடைக்கு மேல் பர்தா உடை அணிந்து வருகிறார்கள். இதற்கு அந்த பள்ளி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் இஸ்லாமிய மாணவிகள், சீருடைக்கு மேல் பர்தா உடை அணிந்து வருகிறார்கள். இதற்கு அந்த பள்ளி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    கர்நாடகத்தில் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மத உணர்வுகளை தூண்டும் ஆடைகளை அணியக்கூடாது என்று புதிய கட்டுப்பாடு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் அந்த மாணவிகள் பர்தா அணிந்து வருவதை நிறுத்தவில்லை. பர்தா அணிந்து வந்தால் பள்ளியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அந்த பள்ளி கூறியுள்ளது. அந்த மாணவிகள், தாங்கள் பர்தா அணிந்தே பள்ளிக்கு வருவோம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

    இந்த மாணவிகளுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் மாணவர்களில் 100 பேர் காவித்துண்டுடன் பள்ளிக்குள் வந்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகள் பர்தா அணிந்து வகுப்புக்கு வரக்கூடாது என்று அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த பிரச்சினை தீராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. நேற்று உடுப்பியில் பர்தா அணிந்து வந்த மாணவிகள் பள்ளிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் காவல்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, பள்ளி மாணவர்கள் மத உணர்வுகளை தூண்டும் வகையில் ஆடைகளை அணியக்கூடாது என்று கூறியுள்ளார்.



    இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

    பள்ளிக்கூடங்களில் சர்ச்சைக்கு இடமளிக்கக் கூடாது. மத விஷயங்கள் விசாலமான மனநிலையை வளர்த்து கொள்ள வேண்டும். பள்ளிகளில் சீருடை தான் முக்கியம். அங்கு மற்ற உடைகளுக்கு முக்கியத்துவம் கிடையாது. அதாவது மாணவர்கள் மத உணர்வுகளை தூண்டும் வகையில் ஆடைகளை அணியக்கூடாது. கல்வி கூடங்களில் சாதி, மதத்தை தாண்டி அனைவரும் ஒன்றே என்ற மனநிலை அனைவருக்கும் இருக்க வேண்டும். அனைவரும் பாரத மாதாவின் குழந்தைகள் என்ற எண்ணம் மட்டுமே இருக்க வேண்டும். பூஜைகள், பிரார்த்தனைகள் கோவில்கள், மசூதிகளில் வைத்துக்கொள்ள வேண்டும். கல்வி கூடங்களில் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு குறித்து பேச வேண்டும்.

    இவ்வாறு கூறினார் அமைச்சர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Karnataka, Muslim

    அடுத்த செய்தி