பொறுமை பற்றி எங்களுக்கு லெக்சர் கொடுக்க வேண்டாம்: வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்

பொறுமை பற்றி எங்களுக்கு லெக்சர் கொடுக்க வேண்டாம்: வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்

உச்ச நீதிமன்றம் (கோப்புப்படம்)

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

 • Share this:
  மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

  போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் மீதான விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசை கண்டித்ததுடன், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நீதிபதிகள் குழுவை நியமிக்க உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

  இந்நிலையில், மீண்டும் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு இந்த விஷயத்தைக் கையாண்ட விதமும் பேச்சு வார்த்தைகள் சென்ற விதமும் தங்களுக்கு மிகவும் ஏமாற்றமளிப்பதாக தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு திட்டவட்டமாக தெரிவித்தது.

  அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் நீதிமன்றம் பொறுமை காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார், ஆனால் நீதிபதிகள் அமர்வு, “உங்களுக்கு நிறைய கால அவகாசம் கொடுத்தாகி விட்டது மிஸ்டர் அட்டர்னி ஜெனரல் எங்களுக்கு பொறுமை பற்றி சொற்பொழிவு ஆற்றாதீர்கள்.

  நீங்கள் பிரச்சனையின் அங்கமா, அல்லது தீர்வின் அங்கமா என்பது எங்களுக்குப் புரியவில்லை. நீங்கள் திறம்பட செயல்படுவதாக நாங்கள் நம்பவில்லை.

  சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அரசு பற்றியும் விவசாயிகள் பிரச்சனையை அரசு கையாளும் விதம் பற்றியும் ‘உச்ச நீதிமன்றம் கடுமையான கருத்துகளை தெரிவிக்கிறது’ என்றார்.

  அதற்கு நீதிபதிகள் அமர்வு, “தீங்கற்ற விதத்தில் உண்மையை எங்களால் இப்படித்தான் கூற முடியும்” என்றனர்.

  மேலும் போராட்டங்கள் வன்முறையாக மாறுவது குறித்த சாத்தியங்கள் பற்றி அமர்வு கூறும்போது, “யாருடைய ரத்தக்கறையும் எங்கள் கைகளில் படிவதை நாங்கள் ஏற்கவில்லை” என்றது.

  எங்கள் உத்தரவில் எந்த விவசாய நிலமும் அபகரிக்கப்படாது என்று சொல்ல முடியும் என்றார் தலைமை நீதிபதி போப்டே.

  வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா கூறும்போது, பேச்சுவார்த்தை, விவாதங்களுக்கு நிறைய பேர் வந்தனர் ஆனால் பிரதமர் விவசாயிகளைச் சந்திக்க வரவில்லை என்றார்.

  அதற்கு நீதிபதிகள், ‘பிரதமர் வர வேண்டும் என்று நாங்கள் உத்தரவிட முடியாது’ என்றார்.
  Published by:Muthukumar
  First published: