முகப்பு /செய்தி /இந்தியா / இந்தியாவுக்கு நிலநடுக்கம் வருமா? வந்தால் தடுக்க அரசு தயாரா?

இந்தியாவுக்கு நிலநடுக்கம் வருமா? வந்தால் தடுக்க அரசு தயாரா?

காட்சிப்படம்

காட்சிப்படம்

Earthquake : சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தியாவைத் தாக்கினால் என்னவாகும். இந்தியாவிற்கு நிலநடுக்கம் அபாயம் உள்ளதா என்ற தகவல்கள் பற்றி பார்ப்போம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

துருக்கி மற்றும் சிரியா இடையே தொடர்ந்து தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மிக மோசமான சேதம் ஏற்பட்டுள்ளது. ஒரு வேலை இந்தியாவிற்கு அது போல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் திடீரென ஏற்பட்டால், நாட்டின் உட்கட்டமைப்பு அதனைத் தாக்குப்பிடிக்குமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

துருக்கியைப் பொருத்தவரை முதலில் தாக்கிய நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆகப் பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, 4 முறை தாக்கிய நிலநடுக்கத்தில் இதுவரை 5000-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 200க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கி தரைமட்டமாகியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து வீதிகளில் தவித்து வருகின்றனர்.

இது போன்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தியாவைத் தாக்கினால் என்னவாகும். இந்தியாவிற்கு நிலநடுக்கம் அபாயம் உள்ளதா என்ற தகவல்கள் பற்றி பார்ப்போம்.

இந்தியாவை நிலநடுக்கம் தாக்குமா?

இந்தியாவைப் பொருத்தவரை எந்த நேரமும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்குவதற்கான அபாயம் உள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்திருக்கும் இமயமலை மலைத்தொடர்கள் ஐரோப்பியப் புவியியல் தடங்களுடன் பின்னி உருவானது. எந்த நேரமும் நகரும் தட்டுக்கள் அதன் அடியில் இருப்பதினால், நிலநடுக்க ஏற்படுவதற்கான அபாயங்கள் அதிகமே. ஒரு வருடத்திற்கு 47 மிமீ அளவு இந்தியத் தட்டுகள் நகர்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவிற்கு எந்த நேரம் வேண்டுமானலும் வடக்கு பகுதியில் இருந்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கும் அபாயம் உள்ளது என்றும் அப்படி ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு இந்தியா தயாராக வேண்டும் என்று கூறியிருந்தனர்.

Wadia Institute of Himalayan Geology சேர்ந்த சீனியர் புவி இயற்பியல் அஜய் பால் இது குறித்து தெரிவிக்கையில், இமயமலையில் எப்போதுமே நிலநடுக்க அபாயம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. மேலும் அது சக்திவாய்ந்த நடுக்கத்தை எப்போது வெளியிடும் என்று யாராலும் கணிக்க முடியாது என்று கூறியுள்ளார். ஒரு வேலை நாளையே ஏற்படலாம் அல்லது 100 வருடங்கள் கழித்துக் கூட ஏற்படலாம் என்று கூறியுள்ளார்.

கடந்த 150 வருடங்களில் 1897 இல் சில்லாங், 1905இல் கங்கார, 1934 இல் பீகார்- நேபால் இடையே மற்றும் 1950 இல் அசாம் நான்கு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 2001 இல் ஏற்பட்ட பூஜ் நிலநடுக்கத்தில் சுமார் 20,000 பேர் இறந்துள்ளனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்தியாவில் நிலநடுக்கத்தை எதிர்கொள்ளத் தயாரா?

earthquake -proof building policy என்ற கட்டிடத்திட்டத்தை இந்தியா கொண்டுள்ளது. இந்தியாவின் நிலப்பரவுப்படி 59 சதவீதம் நிலநடுக்கம் தாக்கும் அபாயம் உள்ள நிலங்கள் தான். அதனால் இந்திய அரசு நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் கட்டிடத்திட்டங்களை வழிகாட்டுதல்களை அறிவுறுத்தியுள்ளனர். வீடுகள் மற்றும் பெரிய அளவிலான கட்டிடங்கள் கட்டும் போது அரசு வழிகாட்டுதல் படி கட்ட வேண்டும்.

துருக்கியைப் பொருத்தவரை நிலநடுக்கத்தைத் தாக்குவதற்கு ஏதுவான கட்டிட அமைப்புகள் இல்லையென்றே குறிப்பிடுகின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள சேதம் இயற்கை சேதம் என்பதுடன் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட சேதம் என்று தான் சொல்ல வேண்டும் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

First published:

Tags: Earthquake, Turkey Earthquake