ஹோம் /நியூஸ் /இந்தியா /

எருமையின் உரிமையாளர் யார் என கண்டுபிடிக்க டிஎன்ஏ பரிசோதனை - காவல்துறை உத்தரவு

எருமையின் உரிமையாளர் யார் என கண்டுபிடிக்க டிஎன்ஏ பரிசோதனை - காவல்துறை உத்தரவு

எருமை மாட்டிற்கு மருத்துவ பரிசோதனை

எருமை மாட்டிற்கு மருத்துவ பரிசோதனை

DNA test : இந்த எருமை கன்று என்னுடையது தான் என நிரூபிக்க சந்திரபால் 2 ஆண்டுகளாக போராடி வருகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டத்தில் உள்ள அகமதுகர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரபால் கஷ்யாப். விவசாய தொழிலாளரான இவரின் எருமை மாடு ஈன்ற கன்றுக்குட்டி 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி காணாமல் போனது.

காணாமல் போன தனது எருமையை தேடி தனது கிராமம் முழுக்க அலைந்தார் சந்திரபால். தனது கிராமத்தில் எருமையை காணவில்லை என்பாதல், அவர் சோகத்தில் இருந்த நிலையில், நான்கு மாதங்கள் கழித்து அருகே உள்ள பீன்பூர் என்ற கிராமத்திற்கு சொந்த வேலையாக சென்றுள்ளார். அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த சத்வீர் சிங் என்பவரிடம் உள்ள எருமை கன்றை பார்த்த அவர், அந்த எருமைக் கன்று தன்னுடையது என அடையாளம் கண்டுள்ளார்.

சத்வீரிடம் சென்று அந்த எருமை கன்று என சந்திரபால் கேட்கவே, அதற்கு சத்வீர் இது என்னுடைய கன்று தான் மறுத்து பேசியுள்ளார். உடனடியாக அவர் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், கோவிட் பெருந்தொற்று காரணம் காட்டி காவல்துறை முறையாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதை அடுத்து மாவட்ட எஸ்பி சுக்ரிதி மஹாதேவ்விடம் புகார் அளித்த சந்திரபால், தனது புகார் நகலை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு அனுப்பியுள்ளார்.

சந்திரபாலின் விடா பிடியான போராட்டத்தை அடுத்து இந்த பிரச்னைக்கு தீர்வு காண டிஎன்ஏ பரிசோதனை எடுக்க காவல்துறை முடிவெடுத்துள்ளது. சந்திரபாலிடம் தாய் எருமை உள்ள நிலையில், சர்ச்சைக்குரிய கன்றின் டிஎன்ஏவை தாய் எருமை டிஎன்ஏவுடன் பொருத்திப் பார்த்து பரிசோதனை செய்ய காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் கன்றுக்கு யார் உரிமையாளர் என உறுதியாகிவிடும் என மாவட்ட எஸ்பி சுக்ரிதி மஹாதேவ் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 2.6 கோடி ஹெக்டேர் தரிசு நிலம் 2030-க்குள் விவசாய நிலமாக மாற்றப்படும்- பிரதமர் மோடி உறுதி

அந்த கன்றுக்குட்டி தன்னுடையது தான் என உறுதி செய்யது குறித்து விளக்கும் சந்திரபால், “மனிதர்களைப் போவவே விலங்களுக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் உள்ளன. கன்றின் இடது காலில் தழும்பு உள்ளது. அதேபோல் அதன் வாலின் இறுதிப்பகுதியில் வெள்ளை நிற அடையாளம் உள்ளது. அதேபோல் நான் அருகே சென்றால் கன்று என்னை நன்றாக அடையாளம் கண்டு அருகே வருகிறது. இதை விட என்ன வேண்டும் என சொல்கிறார்” புகார் அளித்த சந்திரபால்.

First published:

Tags: DNA Test, Theft