• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மகளை பாலியல் வன்புணர்வு செய்த மாற்றாந்தந்தை: டிஎன்ஏ அறிக்கையால் தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்!

மகளை பாலியல் வன்புணர்வு செய்த மாற்றாந்தந்தை: டிஎன்ஏ அறிக்கையால் தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்!

பாலியல் வன்புணர்வு

பாலியல் வன்புணர்வு

சிறுமி 7ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது, வீட்டு வேலைக்காக அவருடைய தாய் வெளியே சென்ற பின்னர் அவருடைய மாற்றாந்தந்தை அவரை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்.

  • Share this:
2 ஆண்டுகளாக தொடர்ந்து மகளை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட நிலையில் கரு உருவாக காரணமாக இருந்த மாற்றாந்தந்தைக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

மகளை 2 ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு செய்ததன் விளைவாக கரு உருவாக காரணமாக இருந்த மாற்றாந்தந்தை தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரிய மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி சந்தீப் ஷிண்டே, தாய் பிறழ்சாட்சியாக மாறிய நிலையில் டி.என்.ஏ பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

வழக்கு விபரம்:

2000ம் ஆண்டில் சிறுமி 2 வயதாக இருக்கும் போதே தந்தை இறந்துவிட, வீட்டு வேலை பார்த்து வந்த அவரின் தாய், மகராஷ்டிராவின் தானே பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் ஒருவரை 10 ஆண்டுகள் கழித்து 2010ம் ஆண்டில் மறுமணம் செய்துகொண்டார். அதுவரை தாத்தா வீட்டில் வளர்ந்து வந்த சிறுமி 2012ம் ஆண்டில் தனது தாய், மாற்றாந்தந்தை, அவருக்கு பிறந்த மகன் ஆகியோருடன் வசிக்கத்தொடங்கினார்.

சிறுமி 7ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது, வீட்டு வேலைக்காக அவருடைய தாய் வெளியே சென்ற பின்னர் அவருடைய மாற்றாந்தந்தை அவரை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார். தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு அவர் இந்த கொடுமையை அனுபவித்து வந்திருக்கிறார். சிறுமியை மிரட்டிய அவரின் மாற்றாந்தந்தை இது தொடர்பாக யாரிடமும் கூற கூடாது இல்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் மிரட்டியிருக்கிறார். இருப்பினும் சிறுமி ஒரு கட்டத்தில் கர்ப்பம் தரித்ததால் விவகாரம் வெளியே தெரிந்தது. மாற்றாந்தந்தை தான் இந்த கொடுமையை செய்தது என அறியாத அவருடைய தாயார் இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

சிறுமியின் கருவை கலைத்துள்ளனர். பின்னர் மர்ம நபர் என்ற அடிப்படையில் வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கினர் காவல்துறையினர். இதன் ஒரு கட்டமாக சிறுமியின் ரத்த மாதிரிகள் மற்றும் அவருடைய உடலில் இருந்து கரு செல்கள் ஆகியவற்றை டி.என்.ஏ பரிசோதனைக்காக சேகரித்தனர்.

சிறுமியிடம் விசாரித்த போது அவர் உண்மையை மறைக்கும் விதமான தன்னை ரிக்‌ஷா தொழிலாளி ஒருவரும், தன்னுடன் படிக்கும் ஒருவரும் பாலியல் வன்புணர்வு செய்ததாக போலீசாரிடம் கூறினார். பல முறை உண்மையை மறைக்க அவர் முற்பட்ட போதிலும் ஏப்ரல் 26, 2014ம் ஆண்டு அவர் தனது மாற்றாந்தந்தை தான் இந்த செயலில் ஈடுபட்டதாக உண்மையை போட்டு உடைத்தார்.

தனது தாயாரும், அவரும் மாற்றாந்தந்தை தயவில் தான் வாழ்ந்து வருவதால் அவர் இந்த உண்மையை மறைத்ததாக கூறினார். அதன் பின்னர் அவர் அரசு பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டார். இதனிடையே டின்.என்.ஏ அறிக்கையின் மூலம் அவருடைய மாற்றாந்தந்தை தான் இந்த செயலில் ஈடுபட்டார் என்ற தெள்ளத்தெளிவான ஆதாரம் மூலம் குற்றச்சாட்டு நிரூபனமானது. முன்னதாக அவருடைய தாயாரும் பிறழ்சாட்சி ஆக மாறியது குறிப்பிடத்தக்கது,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: