முகப்பு /செய்தி /இந்தியா / காஷ்மீரில் வீட்டுச்சிறையில் அரசியல் தலைவர்கள் - டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம்

காஷ்மீரில் வீட்டுச்சிறையில் அரசியல் தலைவர்கள் - டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

டி.ஆர். பாலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

  • Last Updated :

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகள் டெல்லியில் இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காஷ்மீரில் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக் கோரி திமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இது குறித்து நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், திட்டமிட்டபடி டெல்லியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனக் கூறினார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெறும் என்றும் இதில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 14 கட்சிகள் கலந்து கொள்வதாகவும், 100-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் பங்கேற்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க... காஷ்மீர் இணைப்பின் கதை!

top videos

    First published:

    Tags: Article 370, Delhi, DMK protest, Kashmir