ஹோம் /நியூஸ் /இந்தியா /

புதுவையில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகும் திமுக?

புதுவையில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகும் திமுக?

புதுவையில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகும் திமுக?

புதுச்சேரியில் திமுக தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் என்றும், 30 தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெற வைக்காவிட்டால் தற்கொலை செய்வேன் என்றும் அக்கட்சி எம்.பி ஜெகத்ரட்சகன் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழக சட்டப்பேரவை தேர்தலுடன் புதுச்சேரி சட்டப்பேரவைக்கும் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகனை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க திமுக தலைமை திட்டமிடுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது இருக்கும் திமுக - காங்கிரஸ் கூட்டணி கருணாநிதியால் உருவாக்கப்பட்டதாக திமுக எம்.எல்.ஏ சிவா கூறியிருந்தார். மேலும், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான தற்போதைய ஆட்சிக்கு ஆபத்து இல்லையென்றும் விளக்கமளித்திருந்தார்.

  இந்நிலையில், புதுச்சேரியில் திமுக-வின் முதலமைச்சர் வேட்பாளராக பேசப்படுபவரும், அம்மாநில திமுக பொறுப்பாளருமான ஜெகத்ரட்சகன் தலைமையில் திமுகவினர் பேரணி நடத்தினர். அதன்பின் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், பேசிய திமுக வடக்கு அமைப்பாளர் எஸ்.பி சிவக்குமார், ஜெகத்ரட்சகனை முதலமைச்சராக்க வேண்டும் என்பதே கட்சியின் நோக்கம் என்றார். அதைத்தொடர்ந்து பேசிய ஜெகத்ரட்சகன்,

  புதுச்சேரியில் 23 ஆண்டுகளுக்கு முன் அமைந்ததை போன்று திமுக ஆட்சி மீண்டும் அமையும் என்றார். சொர்க்க பூமியாக திகழ்ந்த புதுச்சேரியை தற்போது பார்க்கும் போது வயிறு எரிவதாகவும், மாநில வளர்ச்சிக்காக இதுவரை என்ன திட்டம் தீட்டியிருக்கிறார்கள் என்றும் கேள்வியெழுப்பினார். தேவையற்ற சண்டை போட்டு இந்த மண்ணை வீணாக்கிவிட்டதாகவும் சாடினார்.

  புதுச்சேரி மக்களின் ஒருவனாக இருந்து, மாநிலத்தை வளமிக்கதாக மாற்றிக்காட்டுவேன் என்றும் ஜெகத்ரட்சகன் சூளுரைத்தார். அதேநேரம், புதுச்சேரியில் திமுக தனித்து ஆட்சிமைப்பது சாத்தியமற்றது என்று மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

  மேலும் படிக்க...தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் இன்று திறப்பு.... வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற நடவடிக்கை...

  இந்நிலையில், புதுச்சேரியை காங்கிரஸ் அரசு வீணாக்கிவிட்டதாக ஜெகத்ரட்சகன் பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க முதலமைச்சர் நாராயணசாமி மறுத்துவிட்டார். ஜெகத்ரட்சகனின் பேச்சால் புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா என்ற கேள்வியெழுந்துள்ளது.

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: DMK, DMK Alliance, Puducherry