விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு குறித்து ட்விட்டரில் அவதூறு பரப்பியதாக திமுக தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த நிர்வாகி கைது..

விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு குறித்து ட்விட்டரில் அவதூறு பரப்பியதாக திமுக தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த நிர்வாகி கைது..

அய்யாகண்ணு

விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு குறித்து சமூக வலைதளங்களில் போலி முகவரிகளில் 2 ஆண்டுகளாக அவதூறு பரப்பியதாக திமுக தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். நடந்தது என்ன?

 • Share this:
  தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவராக அய்யாக்கண்ணு செயல்பட்டு வருகிறார். திருச்சி மாநகரம் அண்ணாமலை நகரில் அவர் வசித்து வருகிறார். இந்த நிலையில், தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் சிலர் அவதூறு பரப்பி வருவதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் அய்யாக்கண்ணு புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், அவதூறு பதிவுகளை ஆய்வு செய்தனர். விசாரணையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் 40 வயதான ஜெயச்சந்திரன், போலி முகவரிகளில் சமூக வலைதளங்களில் கடந்த 2 ஆண்டுகளாக அய்யாக்கண்ணு பற்றி அவதூறு பரப்பி வந்தது தெரியவந்தது.

  இதையடுத்து அவர் மீது தகவல் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஜெயச்சந்திரனைக் கைது செய்தனர். மேலும் தன்னைப் பற்றி அவதூறு பரப்பும் அனைவரையும் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் அய்யாக்கண்ணு கோரிக்கை விடுத்துள்ளார்.

  மேலும் படிக்க...இங்கிலாந்தில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

  தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் சட்ட விரோதமாக அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  .உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: