நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்: நீட் தேர்வுக்கு எதிராக கண்டன முழக்கம்...

சுற்றுச்சூழல் வரைவு மசோதாவையும் மத்திய அரசு புகுத்துவதாகக் குற்றம்சாட்டி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. வசதிபடைத்தவர்கள் மட்டும் மருத்துவம் பயிலும் வகையில் நீட் தேர்வு உள்ளதாக திருச்சி சிவா விமர்சித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்: நீட் தேர்வுக்கு எதிராக கண்டன முழக்கம்...
திமுக எம்பிக்கள் போராட்டம்
  • News18
  • Last Updated: September 14, 2020, 12:22 PM IST
  • Share this:
நீட் தேர்வுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா பரவலுக்கு மத்தியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக மக்களவை மட்டும் காலையில் கூடியது. எம்பிக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து வருகை தந்திருந்தனர்.

இதனிடையே, நீட் தேர்வுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், டி.ஆர் பாலு, திருச்சி சிவா, கனிமொழி உள்ளிட்டோர் நீட் தேர்வுக்கு எதிரான வாசகம் அடங்கிய முகக்கவசம் அணிந்தபடி பங்கேற்றனர்.


Also read... நீட் விவகாரத்தில் ஆளும் கட்சியினர் நாடகம் நடத்துகின்றனர் - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..

அப்போது, கல்வியை காவிமயமாக்கும் விதமாக புதிய கல்வி கொள்கையையும், சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் சுற்றுச்சூழல் வரைவு மசோதாவையும் மத்திய அரசு புகுத்துவதாகக் குற்றம்சாட்டி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. வசதிபடைத்தவர்கள் மட்டும் மருத்துவம் பயிலும் வகையில் நீட் தேர்வு உள்ளதாக திருச்சி சிவா விமர்சித்தார்.
First published: September 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading