நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடர் இன்று கூடியது. அப்போது, புதிதாக பதவியேற்றுக்கொண்ட திமுகவின் ராஜேஷ்குமார், வெல்க, தளபதி, வெல்க உதயநிதி என்று கூறி பதவியேற்றுகொண்டார்.
அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். இதையடுத்து அவர்களின் இடம் காலியானது. காலியான மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வேட்பாளராக திமுக சார்பில் கனிமொழி சோமு மற்றும் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் அறிவிக்கப்பட்டனர்.
வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் இருவரும் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. அப்போது புதிதாக தேர்வான எம்.பி.க்கள் பதவியேற்றுகொண்டனர். தமிழகத்தின் சார்பில் திமுகவை சேர்ந்த எம்.எம்.அப்துல்லா, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், கனிமொழி சோமு ஆகியோர் எம்பியாக பதவியேற்று கொண்டனர். மூவரும் தமிழில் பதவியேற்றனர்.
கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் பதவியேற்கும்போது, வெல்க தளபதி, வெல்க அண்ணன் உதயநிதி என்று கூறினார். அப்போது துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, முழக்கங்கள் குறிப்பில் சேர்க்கப்படாது என்றும் வெளியில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் கூறிக்கொள்ளலாம் (Slogans will not be part of Record.. Outside, you can say whatever) என்றும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, Parliament Session, Udhayanidhi Stalin