ஹோம் /நியூஸ் /இந்தியா /

3 வேளையும் சட்னி சாப்பிட முடியுமா.. விலைவாசி உயர்வு தொடர்பாக கனிமொழி கேள்வி

3 வேளையும் சட்னி சாப்பிட முடியுமா.. விலைவாசி உயர்வு தொடர்பாக கனிமொழி கேள்வி

கனிமொழி பேச்சு

கனிமொழி பேச்சு

திரிணமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ககோலி கோஷ் தஸ்திதார், அவையில் கத்தரிக்காயை கடித்துக் காண்பித்து, எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வால் மக்கள் காய்கறிகளை பச்சையாக உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi | Tamil Nadu

    நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு தொடர்பாக பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சாமானியர்கள் குழந்தைகளுக்கு உணவு அளிக்க திண்டாடும் நிலை உள்ளதாகவும், 3 வேளையும் சட்னி அரைத்து சாப்பிட முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

    நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்ற வருகிறது. இதில், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம் என அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில், விலைவாசி உயர்வு தொடர்பாக அவையில் விவாதிக்க நேற்று அனுமதி வழங்கப்பட்டது. திமுக எம்பி கனிமொழி பேசுகையில், விலைவாசி உயர்வு காரணமாக ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கை போராட்டமாக மாறியுள்ளது. பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது சுமார் 15 ஆயிரம் ரூபாய் பெட்ரோல், டீசலுக்கு மட்டும் செலவழிக்க வேண்டியுள்ளது.

    அத்தியாவசிய பொருட்கள், உணவு பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் நிறுத்தப்பட்டுள்ளது’ என அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.

    இதையும் படிக்க: IRCTC ரயில்களில் இனி இதற்கு தடை... புதிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியீடு.! 

    தொடர்ந்து பேசிய கனிமொழி, “விலைவாசி உயர்வு குறித்து சிறுமி ஒருவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பென்சில் விலை கூட அதிகரித்திருப்பதாக சிறுமி கடிதத்தில் தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை கொடுத்தாலே போதும். நாங்கள் யாரிடமும் கடன் வாங்கத்தேவையில்லை.  மத்தியஅமைச்சர் பேசுகையில், தக்காளி, வெங்காயத்தின் விலை குறைந்துள்ளதாக கூறுகிறார். மூன்று வேளையும் சட்டினியை மட்டும் அறைத்து சாப்பிட முடியுமா? ” என கேள்வி எழுப்பினார்

    திரிணமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ககோலி கோஷ் தஸ்திதார், அவையில் கத்தரிக்காயை கடித்துக் காண்பித்து, எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வால் மக்கள் காய்கறிகளை பச்சையாக உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    Published by:Murugesh M
    First published:

    Tags: Kanimozhi, Lok sabha