முகப்பு /செய்தி /இந்தியா / “திராவிட மாடலா? குஜராத் மாடலா? நீங்களே முடிவு பண்ணுங்க” மக்களவையில் ஆ.ராஜா பேச்சு

“திராவிட மாடலா? குஜராத் மாடலா? நீங்களே முடிவு பண்ணுங்க” மக்களவையில் ஆ.ராஜா பேச்சு

ஆ.ராசா

ஆ.ராசா

வறுமை கோட்டிற்கு கீழ் வசிப்பவர்கள் குறித்த தரவுகளை முன்வைத்த அவர், குஜராத் மாடலுடன் திராவிட மாடலை ஒப்பிட்டு விமர்சித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

திராவிட மாடலால் தென் மாநிலங்களில் வறுமை பெரும் அளவு குறைந்து இருப்பதாகவும் குஜராத் மாடல் மூலம் நாட்டிற்கு என்ன பயன் கிடைத்தது எனவும் திமுக எம்பி ஆ.ராசா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் பிரதமர் மோடி புதன்கிழமை பதில் அளித்தார். இதனை தொடர்ந்து வியாழக்கிழமை மாநிலங்களவையில் உரையாற்றினார். அப்போது எதிர்க்கட்சிகள் அதானி விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அதானியும் பிரதமர் மோடியும் சகோதரர்கள் என்று கூறி எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பினர். எதிர்கட்சிகளின் அமளியை பொருட்படுத்தாமல் உரையாற்றிய பிரதமர் மோடி , இந்தியா தற்போது சந்திக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் தாங்கள் நிரந்தர தீர்வு காண முயல்வதாக கூறினார்.

இதனை தொடர்ந்து வியாழனன்று,மக்களவையில் பேசிய மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, கல்வி, சுகாதாரம், வேளாண்மைக்கு மத்திய பட்ஜெட்டில் குறைந்த நிதி ஒதுக்கி இருப்பதாக குற்றம்சாட்டினார். வறுமை கோட்டிற்கு கீழ் வசிப்பவர்கள் குறித்த தரவுகளை முன்வைத்த அவர், குஜராத் மாடலுடன் திராவிட மாடலை ஒப்பிட்டு விமர்சித்தார். குஜராத் மாடல் மூலம் நாட்டிற்கு என்ன பயன் கிடைத்தது என்று கேள்வி எழுப்பிய அவர், எந்த மாடல் தேவை என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டார்.

First published:

Tags: A Raja, DMK, Lok sabha, Parliament