Home /News /national /

Puducherry DMK : 15 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்ற திமுக!

Puducherry DMK : 15 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்ற திமுக!

புதுச்சேரி சட்டமன்றம்

புதுச்சேரி சட்டமன்றம்

புதுச்சேரியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக இடங்களில் வெற்றி பெற்று அம்மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. திமுக சார்பில் போட்டியிட்ட 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

    புதுச்சேரியில் 4 முறை திராவிட முன்னேற்றக் கழகம் ஆளுங்கட்சியாக செயல்பட்டுள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, திமுக எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றிருந்தது. அதேபேல 2006ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, திமுக 7 இடங்களில் வெற்றிபெற்று எதிர்கட்சி அந்தஸ்துடன் சட்டமன்றத்தில் பணியாற்றியது.

    இந்நிலையில், நடந்து முடிந்த 2021 புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்திருந்த காங்கிரஸ் கட்சி 14 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 13 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    நடந்து முடிந்த தேர்தலில், உப்பளம் தொகுதியில் போட்டியிட்ட திமுக மாநில பொருளாளர் அனிபால் கென்னடி, அதிமுக வேட்பாளர் அன்பழகனைவிட அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். வில்லியனூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.சிவா, காரைக்கால் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட காரைக்கால் மாவட்ட அமைப்பாளர் ஏ.எம்.எச்.நாஜீம் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    பாகூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.செந்தில்குமார் , முதலியார்பேட்டைத் தொகுதியில் வழக்கறிஞர் சம்பத், நிரவி தொகுதியில் நாக.தியாகராஜன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இதனால், 6 இடங்களை வென்ற திராவிட முன்னேற்றக்கழகம் 15 ஆண்டுகளுக்குப்பிறகு பிரதான எதிர்கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது.

    புதுச்சேரி திமுக எம்.எல்.ஏ.க்கள்


    இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ்-கூட்டணி சார்பில், என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பாஜக 6 தொகுதிகளிலும் வெற்ற பெற்றதால் அந்த கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.

    Must Read : தாத்தாவை மிஞ்சிய பேரனாக உதயநிதி ஸ்டாலின்... அதிக வாக்குகள், அதிக வித்தியாசத்தில் வெற்றி வாகை

     

    அங்கே என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில், அவர் மே 7ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
    Published by:Suresh V
    First published:

    Tags: DMK, MK Stalin, Puducherry, Puducherry Assembly Election 2021

    அடுத்த செய்தி