குஜராத் கலவரம் தொடர்பாக, பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தன்னிலை விளக்கம் தர வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கும் நிலையில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். தொடர்ந்து பிப்ரவரி ஒன்றாம் தேதி, வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை சமூகமாக நடத்துவது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரகலத் ஜோஷி, பியூஸ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு, ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதிமுகவை பொறுத்தவரையில் மக்களவை சார்பில் ஓ.பி.ரவீந்திரநாத்தும், மாநிலங்களவை சார்பில் தம்பிதுரையும் கலந்து கொண்டனர்.
பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நடப்ப கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என பிஜூ ஜனதா தளம் வலியுறுத்திய நிலையில், குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிப்பதா என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என பாரத் ராஷ்ட்ரீய சமிதி கூறியுள்ளது. குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படம் குறித்து பிரதமர் பதிலளிக்க திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, தமிழக பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
மேலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றவும், ஜாதி வாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டதாகவும் டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.