புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பம்: மதசார்பற்ற கூட்டணிக்கு தலைமை ஏற்க ரங்கசாமிக்கு திமுக அழைப்பு

புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பம்: மதசார்பற்ற கூட்டணிக்கு தலைமை ஏற்க ரங்கசாமிக்கு திமுக அழைப்பு

ரங்கசாமி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இதை விரும்புகிறார்...

  • Share this:
புதுச்சேரியில் மதசார்பற்ற கூட்டணிக்கு தலைமை ஏற்க என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து பாஜக உள்ளிட்ட மாற்று கட்சியில் இணைந்தனர். இதனால் அங்கே அரசியல் குழப்பம் நீடித்து வருகின்றது.

இதற்கிடையில், ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணில் தொடருமா அல்லது வேறு முடிவை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில், ரங்கசாமி குழப்பத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாயின.

இதற்கிடையயில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், ரங்கசாமியை சந்தித்தார் பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார். அதன் பின்னர், ‘என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணியில்தான் உள்ளது. தொகுதிப் பங்கீடு குறித்துத் தொடர் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது’ என்று கூறினார்.

இந்நிலையில், மதசார்பற்ற கூட்டணிக்கு தலைமை ஏற்க ரங்கசாமிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. புதுச்சேரியில் மதவாத சக்திகளுக்கு எதிராக கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, காரைக்கால் திமுக அமைப்புச் செயலாளர் நாஜிம் கூறுகையில், ரங்கசாமி தலைமையில் மதசார்பற்ற கூட்டணி அமைக்க, திமுக கூட்டணி கட்சிகள் தயாராக இருப்பதாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இதை விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

30 சட்டமன்ற தொகுதிகளைச் கொண்ட புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக கூட்டணி கட்சி தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், பாஜகவுக்கு 10 தொகுதிகளும், அதிமுகவுக்கு 5 தொகுதிகளும், என்.ஆர். காங்கிரஸ்க்கு 14 தொகுதிகளும் என பங்கீடு செய்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

Must Read : திமுக - மதிமுக தொகுதி பங்கீடு பேசு்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை - மல்லை சத்யா

 

ஆனால், ரங்கசாமி முதலமைச்சர் பதவியைக் கேட்பதாகவும், ஆனால் பாஜக தரப்பில் அதை உறுதி செய்யவில்லை என்றும் கூறப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published: