நான் ஏன் சிறைசென்றேன் என்பதை நினைவுபடுத்தவே தாடி வளர்க்கிறேன்! ஆவேசம் காட்டும் சிவகுமார்

நான் ஏன் சிறைசென்றேன் என்பதை நினைவுபடுத்தவே தாடி வளர்க்கிறேன்! ஆவேசம் காட்டும் சிவகுமார்
டி.கே.சிவகுமார்
  • News18
  • Last Updated: December 4, 2019, 5:36 PM IST
  • Share this:
நான் ஏன் சிறைக்குச் சென்றேன் என்பதை தினந்தோறும் நினைவுபடுத்தவே நான் தாடி வளர்க்கிறேன் என்று கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சியமைப்பதற்கு ஏதுவாக காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகிய 15 எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில் நாளை இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான வாக்குப் பதிவு டிசம்பர் 9-ம் தேதி நடைபெறும். இந்த 15 தொகுதி இடைத்தேர்தல் பா.ஜ.க ஆட்சி தொடர்வதை தீர்மானிக்கும் ஒன்றாக உள்ளது. காங்கிரஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர் சிவகுமார் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். முன்னதாக பண மோசடியில் ஈடுபட்டதாக சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

தற்போது அவர் ஜாமினில் வெளியில் உள்ளார். தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையில் நியூஸ்18-க்கு பேட்டியளித்த அவர், ‘தேசிய அளவில் அரசியல் நடவடிக்கைகளால் மக்கள் விரக்தியில் உள்ளதை நான் பார்க்கிறேன். பொருளாதார விவகாரங்கள் மிகவும் சவாலாக உள்ளது. ஆபரேஷன் தாமரை வெற்றி பெறுவதை மக்கள் விரும்பவில்லை. என்னை சிறைக்கு அனுப்பியவர்களை நினைவில் வைத்திருப்பதற்காக மட்டும் தாடி வளர்க்கவில்லை.


எனக்கு நினைவூட்டவே தாடி வளர்க்கிறேன். ஒவ்வொரு நாளும் நான் என் முகத்தைப் பார்க்கும்போதும், ஏன் என் முகத்தில் தாடி இருக்கிறது என்று நினைத்துக் கொள்வேன். நான் ஏன் திகார் சிறைக்குச் சென்றேன். என்னை யார் சிறையில் அடைத்தது என்பதை நினைத்துக் கொள்வேன்’ என்று தெரிவித்தார்.

Also see:


Loading...

First published: December 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...