வட இந்தியாவில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட தீபாவளி: வண்ண விளக்குகளால் ஜொலித்த அமிர்தசரஸ்

காஷ்மீர், பீகார், பஞ்சாப், மேற்குவங்கம் ஆகிய பகுதிகளில் நேற்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அமிர்தசரஸ் பொற்கோவில் தீபாவளியை முன்னிட்டு வண்ண விள்க்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

வட இந்தியாவில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட தீபாவளி: வண்ண விளக்குகளால் ஜொலித்த அமிர்தசரஸ்
தீபங்கள் ஏற்றி தீபாவளியை கொண்டாடும் வட இந்தியர்கள்
  • News18
  • Last Updated: November 8, 2018, 10:19 AM IST
  • Share this:
வடமாநிலங்களில் தீபாவளி திருநாள் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. வண்ணக் கோலங்கள் இட்டும், பட்டாசுகள் வெடித்தும் மக்கள் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் பட்டாசுகள் கொளுத்தியும் பாடல்கள் பாடியும் தீபாவளியை கொண்டாடினர். இதேபோல் மேற்கு வங்க மாநிலம், சிலிகுரியிலும் பாதுகாப்புப் படை வீரர்கள், இந்தியா பங்களாதேஷ் எல்லையில் பட்டாசுகள் வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், பாட்னாவில் தனது குடும்பத்தினருடன் இணைந்து தீபாவளி கொண்டாடினார். உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் பொதுமக்கள் வீதிகளில் திரண்டு பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.


வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் அமிர்தசரஸ்


பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் தீபாவளியை முன்னிட்டு பொற்கோவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோவில் வளாகம் முழுவதும் தீபங்கள் ஏற்றப்பட்டன. இரவிலும் பகல் போன்று ஜொலித்த பொற்கோவிலை ஏராளமானோர் கண்டு மகிழ்ந்தனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் ஹுப்ளி நதியின் மேல் அமைந்துள்ள ஹவுரா பாலம், மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் ஆகியவையும் மின் விளக்குகளால் ஒளிர்ந்தன. வாரணாசியில் தீபாவளி திருநாளையொட்டி சிறப்பு தீபாராதனையும் வழிபாடுகளும் நடைபெற்றன.மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உள்ள மகாலட்சுதி ஆலயம் வண்ண விளக்குகளால் ஜொலித்தது. குஜராத் மாநிலம் வதேதராவில் உள்ள சுவாமி நாராயண் கோவிலும் பல வண்ண விளக்குகளால் ஒளிர்ந்தது. இதனிடையே குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திரமோடி நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார்.

Also see...

First published: November 8, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading