சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்லும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள்!

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்திருந்த சபாநாயகர் ரமேஷ் குமார், மீதமுள்ள 14 எம்.எல்.ஏக்களையும் இன்று தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

news18
Updated: July 28, 2019, 6:59 PM IST
சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்லும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள்!
கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார்
news18
Updated: July 28, 2019, 6:59 PM IST
கர்நாடகா சபாநாயகர் ரமேஷ் குமாரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14 எம்.எல்.ஏக்கள், சபாநாயகரின் உத்தரவுக்கு எதிராக நாளை உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, புதிய முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றுள்ளார். மேலும், சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கு கோர உள்ளார். இதனிடையே, சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவர பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்திருந்த சபாநாயகர் ரமேஷ் குமார், மீதமுள்ள 14 எம்.எல்.ஏக்களையும் இன்று தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். மேலும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் இந்த ஆட்சிக் காலம் முடியும்வரை தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. அதனால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14 எம்.எல்.ஏக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கெனவே, ராஜீனாமா கடிதம் அளித்துள்ள நிலையில், ஏன் தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.


மேலும், சபாநாயகரின் முடிவுக்கு எதிராக நாளை உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளனர். மொத்தமாக 17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதால் பெரும்பான்மை நிரூபிப்பதில் எடியூரப்பாவுக்கு எந்த சிக்கலும் இருக்காது.

Also see:

First published: July 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...