ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த நண்பர்கள் ஷேர்கான், சிவா. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற விருந்து ஒன்றில் உணவு பரிமாறிய ஷேர்கான் சிவாவிற்கு குறைவாக இறைச்சி துண்டுகளை போட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த சிவா, ஷேர்கானை அன்றிரவு கத்தியால் குத்தி காயப்படுத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக. ஷேர்க்கான் அளித்த புகாரின் பேரில் கடப்பா போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று தன்னுடைய வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த சிவாவை, ஷேர்க்கான் நண்பர்கள் 2 பேர் சமாதான பேசலாம் என்று கூறி அழைத்து சென்றனர்.
பின்னர் அவரை அதே இடத்தில் வெட்டி படுகொலை செய்து ஆட்டோ ஒன்றில் ஏற்றி புறநகர்ப் பகுதியில் குழி தோண்டி புதைத்து விட்டனர். தன்னுடைய மகனை காணவில்லை என்று சிவாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஷேர்கான் மற்றும் அவர்து நண்பர்கள் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
மொத்தமாக வாங்குவதால் ரூ.3.5 கோடி இழப்பு: போக்குவரத்து துறைக்கு சில்லறையாக டீசல் வாங்க முடிவு செய்த தமிழக அரசு
அப்போது அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து சிவாவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். விருந்து சாப்பாட்டில் இறைச்சித் துண்டுகளைக் குறைவாகப் போட்டதற்காக கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.