சதுப்புநில காட்டில் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவுகள்..! புதுச்சேரி மாணவர்கள் அகற்றம்
சதுப்புநில காட்டில் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவுகள்..! புதுச்சேரி மாணவர்கள் அகற்றம்
சதுப்பு நில காடுகள்
மாங்குரோவ் காடுகளில் நகரப் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரில் கலந்து வரும் பிளாஸ்டிக் குப்பைகள் காடுகளுக்கும் இயற்கைக்கு ஆபத்தை உண்டாக்குகிறது.
புதுச்சேரி மாங்குரோவ் காடுகளில் இருந்து ஒரு டன் பிளாஸ்டிக் கழிவுகளை மாணவர்கள் அகற்றினார்கள்.
புதுச்சேரி முருங்கப்பாக்கம் ஆறு மற்றும் கடலும் சந்திக்கும் இடத்தில் மாங்குரோவ் காடுகள் அமைக்கப்பட்டுள்ளன. 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு சுனாமி தாக்குதலை தடுக்கும் விதமாக ஆற்று பகுதியில் கூடுதலாக மாங்குரோவ் காடுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது மிக சிறப்பாக வளர்ந்துள்ள இந்த மாங்குரோவ் காடுகளில் நகரப் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரில் கலந்து வரும் பிளாஸ்டிக் குப்பைகள் காடுகளுக்கும் இயற்கைக்கு ஆபத்தை உண்டாக்குகிறது.
இந்த சதுப்புநிலக் காட்டை மீட்டு எடுக்கும் வகையில் புதுச்சேரி இளைஞர் நல விடுதி சங்கத்தில் உறுப்பினராக உள்ள அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இன்று பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினார்கள்.சேற்றில் இறங்கிய அவர்கள் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றியுள்ளனர்.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பொதுமக்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில், பிளாஸ்டிக் பை போன்றவற்றை குப்பையில் எறியாமல் முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.சுற்றுச்சூழல் பாதுகாப்பு சிரகம்,இந்திய இளைஞர் விடுதிகள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.