• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சமூக வலைதளங்களில் கிரெட்டா தன்பெர்க்கின் கருத்துகளை திருத்தி வெளியிட்ட பெங்களூரு மாணவி கைது

சமூக வலைதளங்களில் கிரெட்டா தன்பெர்க்கின் கருத்துகளை திருத்தி வெளியிட்ட பெங்களூரு மாணவி கைது

திஷா ரவி கைது

திஷா ரவி கைது

திஷா ரவி வன்முறையை தூண்டி விடுவதாகக் கூறி டெல்லி காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

  • Share this:
    டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி, பெங்களூருவில் சமூக வலைத்தளங்களில், கிரெட்டா தன்பெர்க்கின் வாசகங்களை திருத்தி வெளியிட்ட கல்லூரி மாணவியை டெல்லி சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த போராட்டங்களுக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டிருந்தார்.

    இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர், பெங்களூருவை சேர்ந்த திஷா ரவி என்ற மாணவி, கிரெட்டா தன்பெர்க்கின் வாசகங்களை ஒரு போராட்ட குழு சார்பில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, பெங்களூரு வந்த டெல்லி காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

    இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், திஷா ரவி பெங்களூருவில் உள்ள பிரபல கல்லூரியில் படித்து வருவது தெரியவந்தது. மேலும், பகுதி நேரமாக தனியார் நிறுவனம் ஒன்றில் அவர் வேலை பார்த்து வந்துள்ளார்.

    அத்துடன், ‘பிரைடே பார் பியூச்சர்’ என்ற பெயரில் செயல்படும் போராட்ட குழுவில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். வீட்டில் இருந்தபடி வேலை பார்த்து வந்த இவர், சமூக வலைத்தளம் வாயிலாக பலரிடம் விவசாயிகள் போராட்டம் தொடர்பான கிளர்ச்சியை ஏற்படுத்தி வந்துள்ளார்.

    Must read: நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள விவசாய சங்க தலைவர்கள் முடிவு

     

    இந்நிலையில், திஷா ரவி வன்முறையை தூண்டி விடுவதாக டெல்லி காவல்துறையினர் அவரை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், கிரெட்டா தன்பெர்க்கின் வாசகங்களில் 2 வரிகளை மட்டுமே திருத்தி, மற்றவர்களுக்கு அனுப்பியதாக நீதிபதியிடம் அழுதபடியே தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: