ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்தியாவில் நோய் எதிர்ப்பு திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு கூடுதல் தடுப்பூசி? : இன்று ஆலோசனை

இந்தியாவில் நோய் எதிர்ப்பு திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு கூடுதல் தடுப்பூசி? : இன்று ஆலோசனை

தடுப்பூசி

தடுப்பூசி

இந்தியாவில் 21 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஒமைக்ரான் கொரோனா தொற்று பரவல் எதிரொலியாக நோய் எதிர்ப்பு திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு கூடுதல் தடுப்பூசி செலுத்துவது மற்றும் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக நோய் எதிர்ப்பு சக்திக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு இன்று ஆலோசனை நடத்த உள்ளது.

  இந்தியாவில் தகுதிவாய்ந்த மக்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு தவணை தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளனர். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்காத நிலையில், தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவி வரும் புதிய திரிபு வகையான ஒமைக்ரான் தொற்று மக்களை மீண்டும் பீதியடையச் செய்துள்ளது.

  அதைத் தொடர்ந்து மத்திய அரசு ஒமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், நோய் எதிர்ப்புதிறன் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு திறனே இல்லாதவர்களுக்கு கூடுதல் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக நோய் எதிர்ப்பு சக்திக்கான தேசிய தொழில்நுட்ப குழு இன்று ஆலோசனை நடத்த உள்ளது.

  அப்போது, குழந்தைகள் முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது பற்றி முக்கிய முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

  இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை 9 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

  ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கொரோனாதொற்று மக்கள் மத்தியில் புதிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள், தீவிர பரிசோதனை செய்யப்படுகின்றனர்.

  இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை 8 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் ஒருவர் இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

  Must Read : தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  குஜராத் மாநிலத்தில் ஒருவருக்கும், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருவருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Suresh V
  First published:

  Tags: Corona Vaccine, Omicron