Home /News /national /

பெண்களுக்கு மட்டும் இலவச மெட்ரோ பயணம்- திருநங்கைகளுக்கான உரிமை எங்கே?

பெண்களுக்கு மட்டும் இலவச மெட்ரோ பயணம்- திருநங்கைகளுக்கான உரிமை எங்கே?

மாதிரிப்படம்.  Credit: PTI

மாதிரிப்படம். Credit: PTI

இந்த அறிவிப்பில் திருநங்கைகளுக்கான எவ்வித கட்டணச் சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை.

  • News18
  • Last Updated :
டெல்லியில் மெட்ரோ மற்றும் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு பயணக் கட்டணம் இலவசம் என்று குறிப்பிட்ட அரசு, திருநங்கைகளுக்கான உரிமையை அறிவிக்காதது ஏன்? என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

பெண்கள் அதிகளவில் பொது போக்குவரத்தை உபயோகப்படுத்துவதை ஊக்குவிக்கவும், பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் டெல்லி அரசு மெட்ரோ ரயில் மற்றும் அரசுப் பேருந்துகளில் பயணக் கட்டணம் இலவசம் என அறிவித்திருந்தது. ஆனால், இந்த அறிவிப்பில் திருநங்கைகளுக்கான எவ்வித கட்டணச் சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை.

’மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்த பலரும் பொதுப் போக்குவரத்தைத் தான் பயன்படுத்துகின்றனர். இதில் பல வித இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். எங்கள் சமூகம் சார்ந்த மக்களுக்கும் பொருளாதார நெருக்கடிகள் அதிகப்படியாகவே உள்ளன. மானிய விலை அல்லது இலவச போக்குவரத்து எங்களுக்கும் பொருந்தும் என அறிவித்தால் பெரும் உதவியாக இருக்கும்’ என்கிறார் மாற்றுப் பாலினத்தவர்களுக்கான சமூக ஆர்வலர் அனிந்தியா ஹரிஜா.

இதுகுறித்து டெல்லியின் ஆளும்கட்சியான ஆம் ஆத்மி கட்சியின் செய்தித்தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், “இந்த இலவச பொதுப் போக்குவரத்து அறிவிப்பு ஆரம்ப நிலையில்தான் உள்ளது. மக்கள் தங்களது தேவை, மாற்றம் குறித்த எந்தவிதமான ஆலோசனைகளையும் அரசுக்கு வழங்கலாம். அதற்கு ஏற்றாற்போல் மாற்றங்கள் செய்யப்படும்” என்றார்.

மேலும் பார்க்க: எழுத்தாளரும் நடிகருமான கிரீஷ் கர்னாட் காலமானார்!
Published by:Rahini M
First published:

Tags: Delhi, Delhi public Transport, Transgender

அடுத்த செய்தி