• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 6.5 கோடி ஆண்டுகள் பழமையான நத்தைகளின் புதைபடிவங்கள் கண்டுபிடிப்பு..

6.5 கோடி ஆண்டுகள் பழமையான நத்தைகளின் புதைபடிவங்கள் கண்டுபிடிப்பு..

நத்தைகளின் புதைபடிவங்கள் கண்டுபிடிப்பு

நத்தைகளின் புதைபடிவங்கள் கண்டுபிடிப்பு

தெலுங்கானாவின் ஆசிஃபாபாத் மாவட்டத்தின் ஜின்னெதாரி வனப்பகுதியில் தொன்மையான நத்தைகளின் புதைபடிவங்களை கண்டுபிடித்துள்ளனர்.

  • Share this:
தெலுங்கானாவில் வரலாறு, தொல்பொருள் மற்றும் பாரம்பரியத்திற்கான பொது ஆராய்ச்சி நிறுவனத்தின் (PRIHAH) ஆராய்ச்சியாளர்கள், சுமார் 6.5 கோடி ஆண்டுகள் பழமையான நத்தைகளின் காஸ்ட்ரோபாட் (gastropod) புதைபடிவங்களை கண்டறிந்துள்ளனர். தெலுங்கானாவின் ஆசிஃபாபாத் மாவட்டத்தின் ஜின்னெதாரி வனப்பகுதியில் இந்த தொன்மையான நத்தைகளின் காஸ்ட்ரோபாட் புதைபடிவங்கள் கண்டறியப்பட்டதாக ஹைதராபாத்தில் உள்ள சுயாதீன ஆராய்ச்சி அமைப்பான PRIHAH தகவல் தெரிவித்துள்ளது.

நத்தை போன்ற இனங்கள் பிஸா டிர்போலென்சிஸ் (Physa Tirpolensis) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பை அடுத்து தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் ஆசிஃபாபாத் மாவட்டத்தில் ஒரு புதைபடிவ பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி உள்ளனர். PRIHAH குழு அதே இடத்தில் மர புதைபடிவங்களின் பல மாதிரிகள் மற்றும் ஆல்காவின் (algae) பல மைக்ரோஃபோசில்களையும் அடையாளம் கண்டுள்ளது. சமீபத்தில் இதே குழு வரலாற்றுக்கு முந்தைய கருவிகளை கொண்டிருந்த ஒரு சுண்ணாம்பு குகையை ஆசிஃபாபாத்தில் கண்டுபிடித்தது.இதனிடையே நத்தைகளின் காஸ்ட்ரோபாட் புதைபடிவங்கள் கண்டறியப்பட்டுள்ளது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள PRIHAH அமைப்பின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சீனிவாசன், இந்த பகுதியில் ஏற்கனவே ஒரு புதைபடிவ பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை. தற்போது சுமார் 6.5 மில்லியன் ஆண்டுகள் பழமையான நத்தை படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளதால் புதைபடிவ பூங்கா ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற தங்களது யோசனையை அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

Also Read : திருமண நாளில் 100 கிலோ எடையுள்ள லெஹங்காவை அணிந்த மணப்பெண் -வைரலாகும் வீடியோ

தொடர்ந்து பேசிய சீனிவாசன் புகழ்பெற்ற தொல்லுயிரியாலரும், இந்திய புவியியல் ஆய்வு மையத்தில் துணை இயக்குநர் ஜெனரலாக இருந்த ஓய்வு பெற்றவருமான சக்கிலம் வேணுகோபால் ராவ் , நத்தைகள் இருப்பதை உறுதிப்படுத்தினார் மற்றும் PRIHAH குழுவால் சேகரிக்கப்பட்ட புதைபடிவங்களையும் ஆய்வு செய்தார். நத்தைகளின் புதைபடிவங்கள் கண்டறியப்பட்ட இடத்தில சுமார் 6,50,00,000 ஆண்டுகளுக்கு முன்பு ஏரி இருந்து பிற்காலத்தில் அந்த பகுதி லாவாக்களால் மூடப்பட்டிருக்கலாம்.

இதன் காரணமாக ஏரியில் வசித்த நத்தைகள் உள்ளிட்ட பிற உயிரினங்கள் சேற்றில் மூழ்கி பதித்திருக்கலாம். காலப்போக்கில், அது சிலிக்கேட் தாதுக்களால் சிலிசிஃபைட் (silicified) செய்யப்பட்டு புதைபடிவங்களாக மாற்றப்பட்டிருக்கும் என்றும் சீனிவாசன் கூறி உள்ளார். தவிர 6.5 கோடி ஆண்டுகள் பழமையான புதைபடிவம் கண்டறியப்படுள்ளது, ஆசிஃபாபாத் நகரில் பல வாழ்க்கை வடிவங்கள் இருப்பதை குறிக்கிறது.

Also Read : "குட்டையை இப்படி தான் கிராஸ் பண்ணனும்".. பாடம் எடுத்துக்கொண்டே குட்டையில் விழுந்த நபர்- சிரிக்க வைக்கும் வீடியோ

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்ற காஸ்ட்ரோபாட் புதைபடிவங்கள் சங்கரெட்டி  மாவட்டத்தின் டெர்போல்  கிராமத்தில் GSI-ஐ சேர்ந்த கே அய்யாசாமி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. காஸ்ட்ரோபாட் நத்தைகள் physa இனத்தை சேர்ந்தவை. இந்த நத்தைகள் வலதுபுறத்தில் எப்பொழுதும் திறந்திருக்கும் மற்றும் க்ளாக் வைஸ் டைரக்ஷனில் சுருள் வடிவ அமைப்பை கொண்டுள்ளன. ஆனால் physa Tirpolensis வகையில் சிறிய மாற்றம் என்னவென்றால், அதன் சுருள் க்ளாக் வைஸ் டைரக்ஷனுக்கு எதிரானது மற்றும் இடதுபுறத்தில் துளை திறந்திருக்கும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: