டெல்லியில் உள்ள சம்யாபூர் பத்லி என்ற பகுதியில் இரு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 40 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை கூறியதாவது, அச்சிறுமியின் தாயார் ஏப்ரல் 29ஆம் தேதி காவல்துறையை தொடர்பு கொண்டு புகார் தந்துள்ளார். இவர் தனது இரு மகள்களுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார்.
இவரின் மூத்த மகளுக்கு 14 வயது, இளைய மகள் ஆறு மாத குழந்தை. பணிக்கு செல்லும் அந்த பெண், வேலை முடித்து விட்டு வீடு திரும்புகையில், இரு குழந்தைகளும் வீட்டில் இல்லை. உடனே அதிர்ச்சி அடைந்த அப்பெண், அக்கம் பக்கம் தேடியுள்ளார். அப்போது, அண்டை வீட்டிலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்ட நிலையில், அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, இரு நபர்கள் அந்த குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
அந்த பெண்ணை கண்டதும் அவர்கள் இருவரும் இடத்தை விட்டு தப்பியோடியுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையிடம் உடனடியாக புகார் அளித்ததன் பேரில், வழக்குப் பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில், ஒரு நபர் பத்லி மெட்ரோ ஸ்டேஷனில் பிடிபட்டார்.
அந்த நபரை காவல்துறை சரணடையச் சொன்ன நிலையில், அந்த நபர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் காவலர்களை தாக்க முயன்றுள்ளார். உடனடியாக காவல்துறை பதில் தாக்குதல் நடத்த, அந்நபருக்கு காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. அவரை கைது செய்த காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதையும் படிங்க:
ஆப்ரேசன் விடியல்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் உட்பட 8 பேர் கைது
மேலும், தப்பியோடிய இன்னொரு நபரை தேடும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது. இந்த இருவரும் குற்றச் செயலில் ஈடுபட்ட போது போதையில் இருந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிந்துள்ளது. அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி, அதன் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.