ஹோம் /நியூஸ் /இந்தியா /

டிஜிட்டலில் வீட்டு கதவு எண்: ஆந்திராவில் அறிமுகம்!

டிஜிட்டலில் வீட்டு கதவு எண்: ஆந்திராவில் அறிமுகம்!

அறிமுகப்படுத்தப்படும் டிஜிட்டல் டோர் நம்பர்

அறிமுகப்படுத்தப்படும் டிஜிட்டல் டோர் நம்பர்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  நாட்டிலேயே முதன்முறையாக மின்னணு கதவு எண் (டிஜிட்டல் டோர் நம்பர்) முறை ஆந்திர மாநிலம், திருப்பதியில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்.

  தகவல் தொழில்நுட்பப் புரட்சி மனிதர்களின் வாழ்க்கை முறையில் பல்வேறு வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறிப்பிட்ட வீடுகளை எளிதில் அடையாளம் காணுவது, அந்த வீடுகளுக்கு தேவைப்படும் நேரத்தில் அரசு சார்பிலான உதவிகள் விரைவாக கிடைக்க செய்வது ஆகியவை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு அரசுத் துறையினர், பொதுமக்கள் ஆகியோர் பயன்படுத்தும் வகையில் மின்னணு கதவு எண் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  திட்டத்தின் சிறப்பம்சம்: ஜி.பி.எஸ். மூலம் செயல்படும் மின்னணுக் கதவு எண் முறையை பயன்படுத்தி தீ விபத்து, மருத்துவ உதவி தேவை போன்ற அவசர காலங்களில் சேவை வழங்குவோர் தங்கள் மொபைல்போன் மூலம் அந்த வீட்டின் படம், வீடு அமைந்துள்ள வீதி, உரிமையாளரின் பெயர், தற்போதைய நிலை ஆகியவற்றை பார்த்து சரியான நேரத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் அங்கு சென்று சேர முடியும்.

  இதன்மூலம் பொதுமக்கள் தங்கள் வீட்டு விலாசத்தை மிக நீளமாக எழுதி கொடுக்க தேவையில்லை. மின்னணு கதவு எண் முறையில் குறிப்பிட்ட வீட்டிற்கு கொடுக்கப்படும் 9 எண்களை மட்டும் எழுதினால்போதும். அதன்மூலம் தபால், கொரியர், மருத்துவ உதவிகள் ஆகியவை நேரடியாகவே வீட்டுக்கு வந்து சேரும். மேலும் வீட்டு வரி, குடிநீர் வரி ஆகியவற்றை மின்னணு கதவு எண் முறையில் வழங்கப்படும் 9 எண்களை பயன்படுத்தி பொதுமக்கள் செலுத்தலாம். ஆக மொத்தத்தில் மின்னணு கதவு எண் முறையில் வழங்கப்படும் 9 எண்கள் இனிமேல் நமது விலாசமாகவே திகழும்.

  திருப்பதியில் இன்று தொடங்கப்பட்ட மின்னணு கதவு எண் முறை இன்னும் 2 மாதங்களுக்குள் ஆந்திராவின் 110 நகரங்களில் உள்ள அனைத்து கட்டிடங்களுக்கும், தொடர்ந்து கிராமங்களில் உள்ள அனைத்து கட்டிடங்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

  Published by:DS Gopinath
  First published:

  Tags: Andhra Pradesh, Chandrababu naidu, Digital Door Number