Home /News /national /

முதல்வராக நாராயணசாமி நீடித்தால் கட்சி வீழ்ச்சி அடையும்..! காங்கிரஸ் எம்.எல்.ஏ பரபரப்பு பேட்டி

முதல்வராக நாராயணசாமி நீடித்தால் கட்சி வீழ்ச்சி அடையும்..! காங்கிரஸ் எம்.எல்.ஏ பரபரப்பு பேட்டி

எம்.எல்.ஏ

எம்.எல்.ஏ

  • News18
  • 1 minute read
  • Last Updated :
புதுச்சேரி முதல்வராக நாராயணசாமி நீடித்தால் காங்கிரஸ் கட்சி வீழ்ச்சி அடையும் என்று சொந்த கட்சியின் எம்.எல்.ஏ பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

புதுச்சேரி பாகூர் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை என போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு, முதல்வர் நாராயணசாமிக்கு ஆளும் தகுதியில்லை என விமர்சித்தார். இதற்கு அவர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும் என முதல்வர்  தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று சட்டமன்ற கமிட்டி அறையில் செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்த தனவேலு மக்களுக்கான திட்டங்களை உடனுக்குடன் மக்களுக்கு கொண்ட செல்ல வேண்டும் என தான் என்னை தேர்ந்தெடுத்தனர். 3 ஆண்டுகளாய் அமைதியாய் இருந்தேன். அச்சுறுத்தல் காரணமாக அமைதியாக இருந்தேன். முதல்வர் தவறான வழியில் செயல்படுகிறார். அமைச்சர்கள் ஊழல்களில் ஈடுபடுகின்றனர் என்றார்.

புதுச்சேரியில் மோசமான ஆட்சி நடக்கிறது. இதனை எதிர்த்து போராட்டங்களை தொடர்ந்து நடத்துவேன். இந்த ஆட்சியின் ஊழல் பட்டியலை தயாரித்து வைத்துள்ளேன். இதனை கட்சி தலைமையிடம் கொடுப்பேன். முதல்வராக நாராயணசாமி நீடித்தால் 2021 தேர்தலில் காங்கிரஸ் வீழ்ச்சியை பெறும் என்றும் தனவேலு கூறினார்.
Published by:Sankar
First published:

Tags: Narayana samy, Puducherry

அடுத்த செய்தி