இந்த ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டை நடத்தும் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், முதலாவது ஜி20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் பங்கேற்கும் கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் தொடங்கியது.
இதில், காணொலி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய நுகர்வோரும், உற்பத்தியாளர்களும் எதிர்காலம் குறித்து பெரும் நம்பிக்கையுடன் உள்ளதாக தெரிவித்தார். கொரோனாவால் உலகப் பொருளாதாரம் கடும் நெருக்கடியை சந்தித்ததாகவும், குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகள் இன்னும் அதன் பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகவும் கூறினார்.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, இந்தியாவில் அரசு நிர்வாகத்தை மாற்றியமைத்துள்ளதாக கூறிய பிரதமர் மோடி, டிஜிட்டல் நிதியில் சில கண்டுபிடிப்புகள் பொருளாதார ஸ்திரமின்மை மற்றும் தவறாகப் பயன்படுத்துவதற்கான அபாயத்தை ஏற்படுத்துவதாகக் கூறிய பிரதமர் மோடி, உலகளாவிய சவால்களை எதிர்த்துப் போரிடும் வகையில் வங்கிகளை வலுப்படுத்த இணைந்து பணியாற்றுவது அவசியம் என்று கேட்டுக் கொண்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Digital India, Digital Transaction, PM Modi, PM Narendra Modi