• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கர்நாடகாவில் டீசல் விலை ரூ.19 வரை குறைப்பு! லிட்டர் ரூ. 85-க்கு விற்பனை

கர்நாடகாவில் டீசல் விலை ரூ.19 வரை குறைப்பு! லிட்டர் ரூ. 85-க்கு விற்பனை

கர்நாடகாவில் டீசல் விலை அதிரடி குறைப்பு

கர்நாடகாவில் டீசல் விலை அதிரடி குறைப்பு

கர்நாடக அரசு டீசலுக்கான வாட் வரியை ரூ.7 குறைத்து நடவடிக்கை எடுத்திருக்கிறது. மேலும் சேல்ஸ் டாக்ஸையும் குறைப்பு செய்திருக்கிறது.

  • Share this:
    கர்நாடகாவில் டீசல் விலை ரூ. 19 வரை குறைக்கப்பட்டு, லிட்டர் ஒன்று ரூ. 85-க்கு விற்பனையாகிறது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டிருந்தநிலையில் அதன் மீதான கலால் வரியை நேற்று குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

    இதன்படி பெட்ரோல் விலையில் ரூ.5-ம், டீசல் விலை ரூ. 10-ம் குறைக்கப்பட்டது. மேலும் மாநிலங்கள் தங்களுக்கான வாட் வரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது வரை பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், இமாச்சல பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களில் பெட்ரோல், டீசலுக்கான வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கர்நாடக அரசு டீசலுக்கான வாட் வரியை ரூ.7 குறைத்து நடவடிக்கை எடுத்திருக்கிறது. மேலும் விற்பனை வரி எனப்படும் சேல்ஸ் டாக்ஸையும் குறைப்பு செய்திருக்கிறது. இதன் அடிப்படையில் மொத்தம் டீசல் விலையில் மட்டும் ரூ. 19.4 7 குறைக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து கர்நாடகாவில் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 85.03 க்கு விற்பனையாகிறது. இதே போன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 100.63 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இது குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
    பெட்ரோல் மீதான விற்பனை வரி 35 சதவீதத்தில் இருந்து 25.2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. டீசலுக்கான விற்பனை வரி 24 சதவீதத்திலிருந்து 14.3 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

    பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து எதிர்க்கட்சிகள் நேற்றுவரை நமக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் பிரதமர் மோடி ஒரே அறிவிப்பில் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து நடவடிக்கை எடுத்து விட்டார். இதனால் கோடிக்கணக்கான மக்கள் பயன் பெற்றுள்ளனர். பாஜக ஆளும் மாநிலங்களைப் போன்று எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் வாட் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Mushtak
    First published: