Home /News /national /

300 வைரங்கள் பதித்த நெக்லஸ் - ராணி எலிசபெத்-க்கு திருமண பரிசளித்த ஹைதராபாத் நிஜாம்

300 வைரங்கள் பதித்த நெக்லஸ் - ராணி எலிசபெத்-க்கு திருமண பரிசளித்த ஹைதராபாத் நிஜாம்

எலிசபெத் மகாராணியின் நெக்லஸ்

எலிசபெத் மகாராணியின் நெக்லஸ்

பிப்ரவரி 1952 இல் ராணி இரண்டாம் எலிசபெத் அரியணை ஏறிய சில நாட்களுக்குப் பிறகு முதல் புகைப்படம் கிளிக் செய்யப்பட்டது. அந்த புகைப்படம் அவரது முத்திரைகளில் அடிப்படைப் படமாகவும் பயன்படுத்தப்பட்டது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
பிரிட்டனின் மிக நீண்ட காலம் அரசராக இருந்த ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் வியாழக்கிழமை காலமானார்.

ராணி தனது வாழ்நாள் முழுவதும் ஒரு பேஷன் ஐக்கானாக இருந்தார். அவருக்கு நகைகள் மீது அதிக ரசனை இருந்தது. உலகின் மிக விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களை சேகரிப்பது அவரது விருப்பமாக இருந்தது. ஆனால், அவரது சின்னமான ஒரு ஆபரணத்தை, ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய நிஜாம் ராணிக்கு திருமணப் பரிசாக வழங்கியது உங்களுக்குத் தெரியுமா?

1947 ஆம் ஆண்டில், அப்போது பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த ஹைதராபாத்தின் நிஜாம் ஆசஃப் ஜா VII, ராணிக்கு தனது திருமண பரிசாக ஒரு நெக்லஸை பரிசளித்தார்.



 




View this post on Instagram





 

A post shared by The Royal Family (@theroyalfamily)






அதன் புகைப்படத்தை ராயல் குடும்பத்தின் இன்ஸ்டாகிராம் கணக்கில் தற்போது பகிர்ந்துள்ளது. தலைப்பில் "இளவரசி எலிசபெத் ஒரு திருமண பரிசைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று லண்டனில் உள்ள கார்டியர் நிறுவனத்திடம் நிஜாம் பரிசுகளை அனுப்பி அறிவுறுத்தினார். தோராயமாக 300 வைரங்கள் கொண்ட ஒரு பிளாட்டினம் நெக்லஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது."

ராணி தனது ஆட்சியின் போது நெக்லஸை தொடர்ந்து அணிந்தார், பின்னர் அதை கேட் மிடில்டனுக்குக் கொடுத்தார். பிப்ரவரி 1952 இல் ராணி இரண்டாம் எலிசபெத் அரியணை ஏறிய சில நாட்களுக்குப் பிறகு முதல் புகைப்படம் கிளிக் செய்யப்பட்டது. அந்த புகைப்படம் அவரது முத்திரைகளில் அடிப்படைப் படமாகவும் பயன்படுத்தப்பட்டது.  மஹாராணி எலிசபெத் நிசாம் வழங்கிய நெக்லஸை அணிந்திருந்தார்.

எலிசபெத் மகாராணிக்கு பிறகு கோஹினூர் வைரம் பதித்த கிரீடம் யாருக்கு போகும்?

ஹைதராபாத் நிஜாம், அன்றைய இளவரசிக்கு திருமணப் பரிசாக இவ்வளவு விலையுயர்ந்த வைர நெக்லஸை வாங்கக்கூடிய உலகின் பணக்காரர்களில் ஒருவராக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதோடு மட்டுமல்லாது அவர் ராணிக்கு பிரபலமான ஹைதராபாத் தலைப்பாகையையும் பரிசாக அளித்துள்ளார். அதில் இங்கிலாந்து பாணிய ரோஜாக்களை அடிப்படையாகக் கொண்ட மூன்று மலர் ப்ரூச்கள் கொண்டது.  வைரங்களால் பிளாட்டினத்தில் பதிக்கப்பட்டு செய்யப்பட்டவை.

எலிசபத் தனது 70 ஆண்டுகால ஆட்சி முழுவதும் துணிகளில் அணியும் அற்புதமான ப்ரூச் பின்களை அணிந்திருந்தார்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Diamond, Queen Elizabeth

அடுத்த செய்தி