வெயிலில் பிரச்சாரம் செய்ய காம்பீர் டூப்பை பயன்படுத்தினாரா? சர்ச்சைப் புகைப்படத்தின் Fact check

நானும் முதலில் காரில் இருப்பது காம்பீர் என்றுதான் நினைத்தேன். பின்னர், நான் எடுத்த புகைப்படத்தை சூம்(zoom) செய்து பார்க்கும்போதுதான் அது காம்பீர் இல்லை என்று தெரிந்தது’ என்று தெரிவித்தார்.

வெயிலில் பிரச்சாரம் செய்ய காம்பீர் டூப்பை பயன்படுத்தினாரா? சர்ச்சைப் புகைப்படத்தின் Fact check
ஆம் ஆத்மி கட்சியினர் பகிர்ந்த புகைப்படம்
  • News18
  • Last Updated: October 24, 2019, 12:07 PM IST
  • Share this:
கிழக்கு டெல்லி தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், வாக்கு சேகரிக்க அவருக்கு பதிலாக போலி நபரை(duplicate) பயன்படுத்துகிறார் என்று எழுந்த புகாருக்கு பா.ஜ.க பதிலளித்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான ஆறாம் கட்ட வாக்குப் பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது. டெல்லி மாநிலத்துக்கான மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று தான் வாக்குப் பதிவு நடைபெற்றுவருகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகளுக்கிடையே தீவிர போட்டி நிலவுகிறது.

முன்னதாக, தேர்தல் பிரச்சாரத்தின்போது, முன்னாள் கிரிக்கெட் வீரரும் பா.ஜ.க வேட்பாளருமான கவுதம் காம்பீர் தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கினார். இந்தநிலையில், கடந்த இரு தினங்களுக்கு ஆம் ஆத்மி ஆதரவாளர் கபில் என்பவர், ‘வாக்கு சேகரிப்பதற்கு கவுதம் காம்பீர், அவருக்கு பதிலாக போலி நபர் ஒருவரை பயன்படுத்துகிறார்’ என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.


அந்த புகைப்படத்தில் கவுதம் காம்பீர் காரின் உள்ளே உட்கார்ந்திருக்கார். காரின் மேலே, காம்பீர் போல உடையணிந்த ஒருவர் தொப்பி அணிந்து கொண்டு மக்களுக்கு கையசைக்கிறார். இந்தப் புகைப்படத்தை காங்கிரஸ், ஆம் ஆத்மி தலைவர்கள் தொடர்ச்சியாக பகிர்ந்து, பா.ஜ.கவையும், கவுதம் கம்பீரையும் விமர்சனம் செய்தனர். டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிஷ்சோடியாவும் இந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்தார்.

உண்மையில் கவுதம் காம்பீர் பாடி டபுள்(body double) எனப்படும் வாக்குச் சேகரிக்க போலி நபரை பயன்படுத்தினாரா என்பது குறித்து ஆங்கில ஊடகமான அல்ட் நியூஸ்(Alt News)ஆய்வு செய்தது.

அல்ட் நியூஸ் செய்தியின்படி, ‘அந்தப் புகைப்படத்தில் கவுதம் காம்பீருக்கு பதிலாக காரில் நிற்பவர் கவுரவ் அரோரா. கவுதம் காம்பீர் பா.ஜ.கவில் இணைவதற்கு முன்பிருந்தே கவுரவ் அரோராவுடன் இணைந்து பல இடங்களுக்குச் சென்றுள்ளார். இரண்டு பேரின் உடல்வாகு வித்தியாசமானதாகதான்உள்ளது. ஆனால், தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு வித்தியாசம் தெரியாது. அரோரா, வேட்பாளரைப் போன்றே மாலைகளை அணிந்து கொண்டே வாகனத்தில் உள்ளார்.வெயிலில் பிரசாரம் செய்ய டூப் வேட்பாளரா? கவுதம் கம்பீருக்கு ஆம் ஆத்மி கேள்வி

இந்தச் சம்பவம் நடைபெற்றபோது களத்தில் இருந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் புகைப்படக் கலைஞரிடம் அல்ட் நியூஸ் செய்தி நிறுவனம் தொடர்பு கொண்டது. அவர்களுக்கு பதிலளித்த புகைப்பட கலைஞர், ‘தரையில் நின்றுகொண்டு நான் முதலில் புகைப்படம் எடுக்கும்போது, காம்பீர் காரின் மேல் இருந்தார். பின்னர், புகைப்படம் எடுக்க நான் ஒரு கட்டடத்தின் மூன்றாவது மாடிக்கு சென்றபோது, காரின் மேல் காம்பீர் இல்லை. அவருக்கு பதிலாக அரோரா இருந்தார். மூன்றாவது மாடியில் எனக்கு அருகில், ஒரு முதியவர் இருந்தார். அவர், காரின் மேல் இருப்பவர் கவுதம் காம்பீர் என்றே நினைத்தார். அரோரா, அவரை நோக்கி கையசைத்தற்கு அவர் மகிழ்ச்சியடைந்தார். காம்பீர் தனனை நோக்கி கையத்தார் என்று மகிழ்ச்சியுடன் கூறினார். அரோராவும் தொடர்ச்சியாக அனைவருக்கும் கையசைத்துக்கொண்டே இருந்தார். மாடியில் இருந்து யாரேனும் பார்த்தால் அது கவுதம் காம்பீர் போலத் தான் தெரியும்’ என்று தெரிவித்தார். நானும் முதலில் காரில் இருப்பது காம்பீர் என்றுதான் நினைத்தேன். பின்னர், நான் எடுத்த புகைப்படத்தை சூம்(zoom) செய்து பார்க்கும்போதுதான் அது காம்பீர் இல்லை என்று தெரிந்தது’ என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக களத்தில் இருந்த மற்றொரு செய்தியாளரிடம் பேசும்போது, ‘காரின் மேல் கவுதம் காம்பீர் நிற்கும்போது, கவுரவ் அரோரா வேறு ஒரு காரில் இருந்தார். பின்னர், பேரணியின் இடையில் காம்பீர், காருக்கு உள்ளே சென்றுவிட்டார். காம்பீர் இருந்த இடத்துக்கு அரோரா வந்துவிட்டார். சுமார், ஒரு மணி நேரம் காம்பீருக்கு பதிலாக அரோரா அந்த இடத்தில் நின்றிருப்பார். நானும், முதலில் அவரை காம்பீர் என்றே நினைத்தேன். அவருடைய செய்கைகள் வித்தியாசமாக இருக்கிறதே என்று நினைத்து உற்று நோக்கும்போதுதான் அவர் காம்பீர் இல்லை என்று தெரிந்தது’ என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த பா.ஜ.க, ‘பிரச்சாரத்தின் இடையில் 10-15 நிமிடங்களில் இடைவெளி எடுப்பது சாதரண விஷயம்தான். வெயிலின் காரணமாக சிறிது சோர்வடைந்த காம்பீர், சிறிது காரில் ஓய்வு எடுத்தார். அந்த நேரத்தில் மேலே இருந்த கட்சித் தொண்டர்கள் தொடர்ச்சியாக மக்களுக்கு கையசைத்துள்ளனர்’ என்று தெரிவித்துள்ளது.




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





Also see:

First published: May 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading