ஹோம் /நியூஸ் /இந்தியா /

கடிதம் மட்டுமல்ல., காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தின் ஒவ்வொரு நிமிட உரையாடலையும் லீக் செய்கிறார்கள் - ரம்யா

கடிதம் மட்டுமல்ல., காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தின் ஒவ்வொரு நிமிட உரையாடலையும் லீக் செய்கிறார்கள் - ரம்யா

திவ்யா ஸ்பந்தனா/ரம்யா

திவ்யா ஸ்பந்தனா/ரம்யா

கடிதம் குறித்த ராகுல் காந்தி சொன்னதாக சொல்லப்படும் கருத்து, கட்சியின் மூத்த தலைவர்களுக்கு மத்தியில் சீற்றத்தை எழுப்பியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வேண்டும் என்று காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதம் மட்டுமல்ல, இப்போது காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் நடக்கும் ஒவ்வொரு நிமிடம் உரையாடலையும் ஊடகங்களுக்கு ஒரு பிரிவினர் கசியவிடுவதாக தெரிவித்துள்ளார் காங்கிரஸ் சமூக வலைதளப் பிரிவைச் சேர்ந்த திவ்யா ஸ்பந்தனா.

  காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு, கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினிமா செய்தார். அதைத் தொடர்ந்து கட்சித் தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. அதனால் தற்காலிக தலைவர் பதவியை சோனியா காந்தி ஏற்றார். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் முழு அளவில் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை. இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு துடிப்பான தலைமை தேவை எனக் கருதுவதாகக் கூறி குலாம் நபி ஆசாத் சசி தரூர் உள்ளிட்ட 23 மூத்த நிர்வாகிகள் சோனியாவுக்கு கடிதம் எழுதினர். அதைத் தொடர்ந்து காரிய கமிட்டி கூட்டத்தை காங்கிரஸ் கட்சி தற்காலிக தலைவர் சோனியா காந்தி இன்று கூட்டியுள்ளார்.

  கூட்டத்தில் அடுத்து தலைவராக விருப்பம் இல்லை என்று சோனியா காந்தி கூறியதோடு, காரிய கமிட்டியானது அடுத்த தலைவரை நியமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே, 23 சீனியர் தலைவர்கள் கடிதம் எழுதியது தொடர்பாக ராகுல் காந்தி கருத்து தெரிவிக்கையில், பாஜகவுக்கு உதவுவதாக (colluding) கடித விவகாரம் அமைந்துள்ளது என கூறியதாக தகவல்கள் வெளியாகின.

  மூத்த தலைவரும், வழக்கறிஞருமான கபில் சிபில், 30 ஆண்டுகளாக பாஜகவுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை கூட வெளியிட்டது கிடையாது என கூறியுள்ளார்.  மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், “ராகுல் தனது கூற்றை நிருபிக்க முடிந்தால், தான் காங்கிரஸில் இருந்து விலகுவதாக” தெரிவித்திருக்கிறார். கடிதம் குறித்த ராகுல் காந்தி கூறியதாக சொல்லப்படும் கருத்து, கட்சியின் மூத்த தலைவர்களுக்கு மத்தியில் சீற்றத்தை எழுப்பியுள்ளது.

  Published by:Gunavathy
  First published:

  Tags: Congress leader, Congress party, Divya spanndana, Kapil sibal, Priyanka gandhi, Rahul gandhi, Shashi tharoor, Sonia Gandhi