12,000 கோடியை செலவழித்துவிட்டு இப்போது எதற்காக என்.பி.ஆர்? - தயாநிதி மாறன்

தயாநிதி மாறன் எம்.பி

 • Share this:
  "ஆதாருக்கு 12,000 கோடியை செலவழித்துவிட்டு இப்போது எதற்காக என்.பி.ஆர்-ஐ செயல்படுத்துகிறீர்கள்" என்று தனது பட்ஜெட் மீதான உரையில் கேள்வி எழுப்பியுள்ளார் எம்.பி தயாநிதி மாறன்.

  முக்கியமான தரவுகளைச் சேகரித்து ஆதார் உங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டது. கை ரேகைகளும், ஐரிஸ் அடையாளமும் அத்துடன் உள்ளது. இன்னும் எதற்கு என். பி.ஆர்?

  ஆதார் என்னும் டைனமிக் தரவை வைத்துக்கொண்டு எதற்காக இப்போது என்.பி.ஆர்-ஐ செயல்படுத்துகிறீர்கள். பி.எஸ்.என்.எல், ஏர் இந்தியா என்னும் இந்திய நிறுவனங்களைக் குறித்து பெருமையாக பேசியிருக்கிறீர்கள். இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? அதை விற்கப்போகிறீர்கள். இப்போது எதை வைத்து பெருமைப்பட முடியும்? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
  Published by:Gunavathy
  First published: