பயணிகளுக்குத் தெரியாமல் அவர்களது பயணத்தின் வகுப்பை மாற்றினால் அவா்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன், இலவச பயணமும் அளிக்க வேண்டும் என்று விமான சேவை நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து இயக்ககம் (டி.ஜி.சி.ஏ) விரைவில் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வர உள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் பிப்ரவரியில் நடைமுறைக்கு கொண்டுவர உள்ளதாக விமான போக்குவரத்து இயக்ககம் தெரிவித்துள்ளது. விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன், சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் அனைத்தும் வரிகள் உட்பட, அத்தகைய டிக்கெட்டுகளின் முழு மதிப்பையும் திருப்பிச் செலுத்த வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட வகுப்பிற்கு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை விமான நிறுவனங்கள் தரமிறக்குவது குறித்து விமானப் பயணிகளிடமிருந்து புகார்கள் எழுந்துள்ள நிலையில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தற்போது பயணிகளின் குறைகளை நிவர்த்தி செய்ய தற்போதுள்ள விதிமுறைகளை திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
மன மகிழ்ச்சிக்கு 'இலவச கட்டிப்பிடி வைத்தியம்'... கவனம் ஈர்த்த இரு கல்லூரி மாணவிகள்!
உதாரணமாக, முதல் வகுப்பு, வணிக வகுப்பு அல்லது பிரீமியம் எகானமியில் தனது டிக்கெட்டை முன்பதிவு செய்த பயணி, செக்-இன் நேரத்தில் சேவை செய்ய முடியாத இருக்கைகள், விமானங்களை மாற்றுதல், அதிக முன்பதிவு போன்ற பல்வேறு காரணங்களால் அவர் முன்பதிவு செய்த வகுப்பிற்கு பதிலாக அதை விட குறைந்த வகுப்பிற்கு மாற்றப்படும்.
இது போன்ற நேரங்களில் பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படலாம். பயணிகளின் மதிப்பு கருதி விமான நிறுவனங்கள் பயணிகளை அடுத்த வகுப்பில் இலவசமாக ஏற்றிச் செல்ல வேண்டும் அல்லது அவர்களது பணம் திருப்பி தரப்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
மேலும், பயணிக்க அனுமதி மறுப்பு, விமான ரத்து, தாமதம் ஆகியவற்றுக்கும் இழப்பீடு வழங்கும் வகையில் முந்தைய விதிமுறைகளில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டைப் பெற்ற பயணிக்கு பயணம் மறுக்கப்படும் நிலையில், அடுத்த ஒரு மணி நேரத்தில் அடுத்த பயணத்தை அவருக்கு அளித்துவிட்டால் இழப்பீடு வழங்கத் தேவையில்லை.
24 மணி நேரத்துக்குள் அடுத்த பயணத்தை அளிக்கவில்லை என்றால் 200 சதவீத பயணக் கட்டண இழப்பீடும், 24 மணி நேரத்தை தாண்டினால் 400 சதவீத இழப்பீடும், மாற்றுப் பயணத்தை பயணி ஏற்கவில்லை என்றால் பயணக் கட்டணத்தை முழுமையாக திருப்பி அளிக்க வேண்டும். அதிகபட்சமாக ரூ. 20 ஆயிரம் வரை இழப்பீடு அளிக்க வேண்டும் என்று தற்போதைய விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Compensation, Travel