ஹோம் /நியூஸ் /இந்தியா /

பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம் - ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம், விமானியின் லைசென்ஸ் ரத்து

பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம் - ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம், விமானியின் லைசென்ஸ் ரத்து

ஏர் இந்தியாவுக்கு அபராதம்

ஏர் இந்தியாவுக்கு அபராதம்

பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவர் மதுபோதையில் சகபயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த நவம்பர் 26ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து இந்தியாவிற்கு ஏர் இந்தியா விமானத்தில் மதுபோதையில் இருந்த சங்கர் மிஸ்ரா என்பவர் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார். விமான உதவியாளர்களிடம் பெண் புகார் அளித்துள்ளார். ஆனால், அவர்கள் ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், பாதிக்கப்பட்ட பெண் ஆத்திரத்துடன் ஏர் இந்தியா குழுமத் தலைவர் சந்திரசேகரனுக்கு தனது நேர்ந்த அவலம் குறித்து கடிதம் மூலம் புகார் அளித்த நிலையில் விஷயம் அம்பலமானது. இதைத் தொடர்ந்து விவகாரம் பூதாகரமான நிலையில், சங்கர் மிஸ்ராவை காவல்துறை கைது செய்தது.

விவகாரத்தில் விரிவான விசாரணைக்கு விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் இந்த வழக்கில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: தண்டாவளத்தில் கிடந்த 3 வயது சிறுமியின் உடல்.. விசாரணையில் வெளிவந்த ஷாக் தகவல்!

மேலும், அன்றைய தினம் விமானத்தை இயக்கிய விமானியின் உரிமத்தை 3 மாதத்திற்கு ரத்து செய்து ஏர் இந்தியா உத்தரவிட்டுள்ளது. அத்துடன், ஏர் இந்தியாவின் இயக்குனருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்து விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தரவில் கூறியுள்ளது. ஏற்கனவே, குற்றச் செயலில் ஈடுபட்ட சங்கர் விமானத்தில் பயணம் செய்ய 4 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Air India