Home /News /national /

ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் பறக்க கட்டுப்பாடு விதிப்பு!

ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் பறக்க கட்டுப்பாடு விதிப்பு!

ஸ்பைஸ் ஜெட்

ஸ்பைஸ் ஜெட்

Spice Jet : ஸ்பைஸ் ஜெட் விமானங்களில் குறைந்தபட்சம் 8 முறை தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு டிஜிசிஏ கடந்த 6ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

    கோடை காலத்தில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சார்பாக இயக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட விமான சேவைகளில் 50 சதவீத விமானங்களை மட்டுமே அடுத்த 8 வாரங்களுக்கு இயக்க வேண்டும் என்று ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திற்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) கட்டுப்பாடு விதித்துள்ளது.

    முன்னதாக, கடந்த ஜூன் 19ம் தேதி தொடங்கி, ஸ்பைஸ் ஜெட் விமானங்களில் குறைந்தபட்சம் 8 முறை தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு டிஜிசிஏ கடந்த 6ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், மேற்கொண்டு விமானங்களை இயக்குவதற்கான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    இதுகுறித்து டிஜிசிஏ அமைப்பு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “பல்வேறு முறை நேரடியாக கண்டறியப்பட்ட தவறுகள், ஆய்வு முடிவுகள் மற்றும் டிஜிசிஏ அனுப்பிய நோட்டீஸுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அளித்த பதில் போன்ற பல விஷயங்களை ஆய்வு செய்தோம். அதே சமயம் பாதுகாப்பான மற்றும் சௌகரியமான போக்குவரத்து சேவையை கருத்தில் கொண்டு, 2022ஆம் ஆண்டின் கோடை பருவத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானப் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்ட பயணங்களில் 50 சதவீத சேவைகளை மட்டுமே அடுத்த 8 வாரத்திற்கு இயக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    ALSO READ | செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் ஏன் பிரதமர் படம் இல்லை.. சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
     முன்னதாக, 10 விமானங்களில் டிஜிசிஏ அமைப்பு கண்டறிந்த கோளாறுகள் மற்றும் தொழில்நுட்ப பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது என்று ஸ்பைஸ் ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது. கோளாறுகள் சரி செய்யப்பட்ட 10 விமானங்களும் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன என்றும் அந்த நிறுவனம் கூறியிருந்தது.

     

    நாடாளுமன்றத்தில் ஒலித்த பிரச்சினை

    ஸ்பைஸ் ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனம் எதிர்கொண்டு வரும் சிக்கல்கள் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு விமானப் போக்குவரத்து அமைச்சகம் அளித்த பதிலில், “2022ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை ஸ்பைஸ் ஜெட் விமானங்களில் அடுத்தடுத்த ஆய்வுகள் நேரடியாக நடத்தப்பட்டன. மொத்தம் 48 விமானங்களில் ஆய்வு நடத்தப்பட்டதில் பெரிய அளவுக்கான கோளாறுகளோ அல்லது பாதுகாப்பு விதிமீறலோ கண்டறியப்படவில்லை’’ என்று தெரிவிக்கப்பட்டது.

    ALSO READ | ஜனநாயகத்தின் பாதுகாவலர்.. பாஸ்போர்ட் வழக்கில் அண்ணாமலையை பாராட்டிய நீதிமன்றம்

    ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விளக்கம்

    டிஜிசிஏ பிறப்பித்துள்ள உத்தரவின் அடிப்படையில் செயல்படுவோம் என்று ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது சீசன் குறைவாக இருக்கின்ற காரணத்தினால் ஏற்கனவே விமான சேவைகளை தாங்கள் குறைத்துக் கொண்டதாகவும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் கூறியுள்ளது. அடுத்து வரக் கூடிய நாட்கள் மற்றும் வாரங்களில், விமான சேவைகளின் ரத்து எதுவும் இல்லாமல் போக்குவரத்து இயல்பாக செயல்படுத்தப்படும் என்று ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: SpiceJet

    அடுத்த செய்தி