ராகுல் காந்தி பயணித்த விமானத்தில் மீண்டும் கோளாறு!

ராகுல் காந்தி பயணித்த விமானத்தில் மீண்டும் கோளாறு!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
  • News18
  • Last Updated: April 26, 2019, 3:18 PM IST
  • Share this:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரசாரத்திற்காக பயணித்த விமானத்தில் மீண்டும் கோளாறு ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், இன்று டெல்லியில் இருந்து பாட்னாவுக்கு சென்ற  விமானத்தில் ராகுல்காந்தி சென்று கொண்டிருந்தார்.


அப்போது விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தார். மேலும் நடைபெறுவதாக இருந்த பிரசாரம்  கூட்டமும் ரத்து என்று கூறி மன்னிப்பும் கேட்டர்.

இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் ராகுலே பதிவிட்டுள்ளார். ”அதில் பீகாருக்கு தாங்கள் சென்ற விமானத்தில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டதாகவும், இதனால் தாங்கள் மீண்டும் டெல்லிக்கே திருப்பியனுப்பட்டதாகவும் கூறியுள்ளார்”.இதன் காரணமாக ”சமஸ்திபூர், பாலசூர், சங்கம்னர் பகுதிகளில் இன்று நடைபெற இருந்த பிரசார கூட்டம் பின்னர் நடைபெறும் என்றும், இதற்காக மன்னிப்பு கோருவதாகவும் ” பதிவிட்டுள்ளார்.

Also see... தமிழகத்தை தாக்கும் ஃபனி புயல்! தற்போதைய நிலவரம்


Also see... போதையில் சாலையில் கல்லைப்போட்ட நபரால் அப்பாவி உயிரிழப்பு..!

Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்