• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கோழிக்கோடு விமான நிலையத்தில் அகலமான விமானங்களை இயக்குவதற்கு தடை

கோழிக்கோடு விமான நிலையத்தில் அகலமான விமானங்களை இயக்குவதற்கு தடை

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்

கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, கோழிக்கோடு விமான நிலையத்தில் அகலமான விமானங்களை இந்த பருவமழை காலத்தில் இயக்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    துபாயிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு வந்த ஏர் இந்தியா சிறப்பு விமானம், ஓடுபாதையைத் தாண்டிச் சென்று விபத்துக்குள்ளானதில் இரு விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர்.

    இதையடுத்து, கோழிக்கோடுக்கு அகலமான அமைப்பு கொண்ட மிகப்பெரும் விமானங்களை இந்த பருவமழை காலத்தில் இயக்குவதற்கு மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தடைவிதித்துள்ளது.

    Also read... மத்திய போக்குவரத்துத்துறையின் புதிய அறிவிப்பு... ஹெல்மெட்டின் விலை அதிகரிக்க வாய்ப்பு



    ஆண்டுதோறும் கனமழையால் பாதிக்கப்படும் சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் சிறப்புத் தணிக்கை செய்யவும் முடிவுசெய்யப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: