Home /News /national /

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் 90 பைலட்டுகள் தகுதி நீக்கம்..! - விமான போக்குவரத்து இயக்குநரகம் அதிரடி

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் 90 பைலட்டுகள் தகுதி நீக்கம்..! - விமான போக்குவரத்து இயக்குநரகம் அதிரடி

spicejet pilot:விமானத்தை தரையிறக்க பயணப்படும்  Maneuvering Characteristics Augmentation System (MCAS) என்ற மென்பொருளில் உள்ள சில குறைபாடுகள்  விபத்துக்கு முக்கிய காரணம் என்று கண்டறியப்பட்டது

ஸ்பைஸ்ஜெட்  விமான நிறுவனத்தின் 90 பைலட்டுகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனதாக விமான போக்குவரத்து துறையின் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

போயிங் நிறுவனத்தின் 737 மேக்ஸ் விமானம் கடந்த 2018-2019 இடைப்பட்ட காலத்தில் அடுத்தடுத்து இரண்டு பெரிய வான் விபத்துக்களை  சந்தித்தது.  2018ம் ஆண்டு, சீனாவுக்கு சொந்தமான ஜெடி-610 விமானம்  இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் அருகில் உள்ள ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 62 பயணிகள் உயிரிழந்தனர். அதேபோன்று, 2019ம் ஆண்டு, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் 302 (போயிங் - 737 இரக விமானம்) எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா நாட்டின் தலைநகரான நைரோபி நோக்கி சென்ற போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், நான்கு இந்தியர்கள் உட்பட்ட 149 பயணிகளும், 8 விமானப் பணியாளர்களுமாக 157 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, உலகளவில் போயிங் - 737 ரக விமானங்களை இயக்க சீனா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தடை விதித்தன.

Flight

இந்நிலையில், விமானத்தை தரையிறக்க பயன்படும்  Maneuvering Characteristics Augmentation System (MCAS) என்ற மென்பொருளில் உள்ள சில குறைபாடுகள்  விபத்துக்கு முக்கிய காரணம் என்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து, இந்த மென்பொருளில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் சில  மாற்றங்களை  அந்நிறுவனம் கொண்டு வந்தது. மேலும், இந்த ரக விமானங்களை இயக்க முறையான சிமுலேட்டர் பயிற்சியையும் விமானிகளுக்கு அறிமுகப்படுத்தியது.

இதனையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விமானங்கள் மீதான தடை நீக்கப்படுவதாக  விமான போக்குவரத்து துறையின் தலைமை இயக்குனர் அறிவித்தார். இந்தியாவில், 13 போயிங் மேக்ஸ் விமானத்தை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் இயக்கி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் மும்பையில் இருந்து கொல்கத்தா புறப்பட்டுச் சென்ற போயிங்க மேக்ஸ் விமானம் நடுவானில் ஏற்பட்ட இன்ஜின் கோளாறு காரணமாக மீண்டும் மும்பைக்கு திரும்பி அனுப்பப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானிகளில் 90 பேர் போயிஸ் 737 விமானத்தை இயக்க போதிய பயிற்சி பெறாமல் அந்த வகை விமானங்களை இயக்கி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து  ஸ்பைஸ்ஜெட்  விமான நிறுவனத்தின் 90 பைலட்டுகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்துதுறையின் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த குறைபாடுகளை கண்டறியாதவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
Published by:Salanraj R
First published:

Tags: SpiceJet

அடுத்த செய்தி