முகப்பு /செய்தி /இந்தியா / திருப்பதி ஏழுமலையான் லட்டு பிரசாதம் -  தேவஸ்தானத்திடம் சென்னை பக்தர் வைத்த கோரிக்கை

திருப்பதி ஏழுமலையான் லட்டு பிரசாதம் -  தேவஸ்தானத்திடம் சென்னை பக்தர் வைத்த கோரிக்கை

திருப்பதி லட்டு

திருப்பதி லட்டு

திருமலையில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என பக்தர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் பக்தர்கள் குறைகேட்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசனம் செய்ய உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. திருப்பதியில் சாமி தரிசனம் காண கூட்டம் கூடுவது போல் திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு வாங்குவதற்கும் கூட்டம் இருக்கும். இங்கு பிரத்யேகமான பாதார்த்தங்களை கொண்டு லட்டு தயாரிக்கப்படுகிறது.

திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுகிழமை அன்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள ஜவஹர் ரெட்டி தலைமையிலான குழு பக்தர்கள் குறைகேட்கும் நிகழ்ச்சியை தொலைப்பேசி வாயிலாக நடத்துவது வழக்கம். அந்த வகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு தங்களது குறைகளைக் கூறினர். தேவஸ்தான அதிகாரிகளிடம் சில விவரங்களையும், சந்தேகங்களையும் கேட்டுத் தெரிந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியானது நேற்று சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது, திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு குறித்து பக்தர்கள் சிலர் புகார் கூறினர். விரைவில் இந்த பிரச்னை சரிசெய்யப்படும் என தேவஸ்தானம் தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிகழ்வில் சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர் பேசுகையில், “ திருமலையில் லட்டு பிரசாதத்தின் தரம் முன்பு போல் இல்லை, தரத்தை உயர்த்த வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.  இது குறித்து ஆய்வு செய்யப்படும் என தேவஸ்தான தலைமை நிர்வாகி ஜவஹர் ரெட்டி பதில் அளித்தார்.  ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் ஒளிபரப்பப்படும் பாராயணங்கள் அருமையாகவும், பயனுள்ளதாகவும் இருப்பதாக பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Laddu, Tirupathi, Tirupati laddu