Home /News /national /

திருமலை தேவஸ்தானத்தின் ரூ.15 காலண்டர் அமேசானில் ரூ.150-க்கு விற்பனை- பக்தர்கள் அதிர்ச்சி

திருமலை தேவஸ்தானத்தின் ரூ.15 காலண்டர் அமேசானில் ரூ.150-க்கு விற்பனை- பக்தர்கள் அதிர்ச்சி

திருப்பதி

திருப்பதி

அமேசானில் திருமலை தேவஸ்தானத்தின் காலண்டர் அதிகவிலைக்கு விற்கப்படுகிறது என்று பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் அச்சிட்டு வெளியிடும் காலண்டர்கள், டைரிகள் ஆகியவற்றிற்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கில் காலண்டர், டைரிகள் ஆகியவற்றை பக்தர்கள் போட்டிப்போட்டு வாங்குகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வரை தேவஸ்தானத்திற்கு காலண்டர்கள், டைரிகள் ஆகியவற்றை அதிக விலை கொடுத்து கள்ள சந்தையில் வாங்கிய சம்பவங்களும் நடைபெற்றன. இதுதொடர்பாக அதிக விலைக்கு விற்ற சிலரை பிடித்து தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.

    இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் காலண்டர்கள், டைரிகள் ஆகியவற்றை ஆன்லைனில் விற்பனை செய்வதற்காக இந்த ஆண்டு இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன் மூலம் உலகெங்கும் உள்ள பக்தர்கள் வாங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டது. ஆனால் அமேசான் நிறுவனம் பெருமாள் மற்றும் பத்மாவதி தாயார் புகைப்படத்துடன் கூடிய 15 ரூபாய் காலண்டரை 299 ரூபாய் என்று குறிப்பிட்டு அதில் 150 ரூபாய் தள்ளுபடி கொடுத்து பக்தர்களுக்கு 149 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது.

    திருப்பதி மலையில் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்ற பக்தர்கள்



     மேலும் 130 ரூபாய் விலை உள்ள டைரி ஒன்றின் விலையை 799 ரூபாய் என்று குறிப்பிட்டு அதில் 300 ரூபாய் தள்ளுபடி செய்து 499 ரூபாய்க்கு இணையதளம் மூலம் விற்பனை செய்கிறது அமேசான். இதேபோல் தேவஸ்தானத்தின் மற்ற வகையான காலண்டர்கள், டைரிகள் ஆகியவற்றையும் அமேசான் நிறுவனம் மிக அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறது.


    இதனை கவனித்த பக்தர்கள் ஒரு ஷாப்பிங் இணையதளத்தில் டைரிகள் மற்றும் நாட்காட்டிகளை அதிக விலைக்கு விற்க தேவஸ்தானம் அனுமதி வழங்கியது தவறானது. இந்த சட்டவிரோத வணிகத்தை முடிவுக்கு கொண்டு வந்து அமேசனுடனான தேவஸ்தானத்தின் ஒப்பந்தத்தில் உள்ள சரத்துக்களை வெளிப்படுத்த வேண்டும். மேலும் காலண்டர்கள், டைரிகள் ஆகியவற்றின் விற்பனை தொடர்பாக அமேசான் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை தேவஸ்தானம் ரத்து செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கேட்கின்றனர்.

    உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் அமேசான் வலைதளத்தின் மூலம் தேவஸ்தானத்தின் காலண்டர்கள், டைரிகள் ஆகியவற்றை எளிதாக வாங்குவதற்கு வசதியாகவே அமேசான் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது என்றும் அமேசானில் காலண்டர்கள் மற்றும் டைரிகளை வாங்க வேண்டும் என்று பக்தர்களை தேவஸ்தானம் வற்புறுத்தவில்லை என்றும் தேவஸ்தானம் தரப்பில் கூறப்படுகிறது.

    இந்நிலையில் வழக்கம்போல் திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள அனைத்து கவுண்டர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள அனைத்து தேவஸ்தான தகவல் மையங்கள் ஆகியவற்றில் புத்தாண்டு காலண்டர்கள் மற்றும் டைரிகளை குறைந்த விலையில் தேவஸ்தானம் நேரடியாக விற்பனை செய்து வருகிறது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Tirumala Tirupati

    அடுத்த செய்தி