Home /News /national /

திருப்பதி லட்டுல கொஞ்சம் சர்க்கரை அளவை குறையுங்கள் - சர்க்கரை நோயாளி பக்தர் தேவஸ்தானத்துக்கு வேண்டுகோள்

திருப்பதி லட்டுல கொஞ்சம் சர்க்கரை அளவை குறையுங்கள் - சர்க்கரை நோயாளி பக்தர் தேவஸ்தானத்துக்கு வேண்டுகோள்

திருப்பதி லட்டில் சர்க்கரையை குறைக்க கோரிக்கை

திருப்பதி லட்டில் சர்க்கரையை குறைக்க கோரிக்கை

திருப்பதி லட்டில் சர்க்கரை அளவை குறைத்துக் கொள்ளுங்கள் என பக்தர் ஒருவர் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tirupati, India
    நாட்டின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான திருப்பதி கோயிலுக்கு நிகராக அங்கு வழங்கப்படும் லட்டு பிரசாதமும் பிரசித்த பெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி வந்து ஏழுமலையானை தரிசனம் செய்வதுடன், வருகை தரும் அனைவரும் தவறாமல் லட்டு பிரசாதத்தை வாங்கி செல்லாமல் இருப்பதில்லை.

    இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்கள் குறைத்தீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. திருமலை அன்னமய்யா பவனில் நேற்று காலை நடைபெற்ற இந்த கூட்டத்தில் பக்தர்களின் நிறை குறை மற்றும் கோரிக்கைகளை தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி கேட்டறிந்தார். அப்போது அவரிடம் ஆந்திர மாநில பக்தர் ஒருவர் சுவாரசியமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த தசரத ராமய்யா என்ற பக்தர் நிர்வாகியிடம் பேசுகையில், திருமலையில் பக்தர்களுக்கு நல்ல முறையில் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், என் தரப்பில் ஒரு கோரிக்கை தான் முன்வைக்கப்படுகிறது.

    லட்டு பிரசாதத்தில் மட்டும் இனிப்பு சற்று அதிகமாக உள்ளதால், எங்களை போன்ற சர்க்கரை நோயாளிகள் அதை உண்ண முடியவில்லை. எனவே, எங்களை போன்ற சர்க்கரை வியாதி உள்ளவர்களும் லட்டு பிரசாதம் சாப்பிட ஏதுவாக லட்டின் இனிப்பு அளவை வைத்து பிரசாதம் தயாரித்துக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என கோரிக்கை வைத்தார்.

    இதையும் படிங்க: ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 11, 2022) தொழில் ரீதியாக சிறப்பான நாளாக இருக்கும்..!

    பக்தரின் கோரிக்கையை கேட்டறிந்த நிர்வாகி தர்மா ரெட்டி இது தொடர்பாக நிச்சயம் ஆலோசித்து முடிவு எடுப்போம் என உறுதியளித்துள்ளார்.அதேபோல் மற்றொரு பக்தர் ஒருவர் நீண்ட தூரத்தில் இருந்து பல மணிநேரம் செலவு செய்து சுவாமி தரிசனம் செய்ய நாங்கள் வருகிறோம். அப்படி இருக்க தரிசிக்க வரும் பக்தர்களை கர்பக்கிரகம் வரும் போது அதிகாரிகள் அவசர அவசரமாக தள்ளிவிடுகிறார்கள். பக்தர்களிடம் அவர்கள் இவ்வாறு கடுமையாக நடந்து கொள்வது வருத்தம் அளிக்கிறது என்றார். இது போன்ற நிகழ்வுகள் தொடரது இருக்கும் விதமாக அவர்களை எச்சரிக்கிறேன் என தர்மா ரெட்டி பக்தரிடம் உறுதியளித்தார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Tirupathi, Tirupati laddu

    அடுத்த செய்தி