முகப்பு /செய்தி /இந்தியா / மக்களவையில் தேவேந்திர குல வேளாளர் மசோதா தாக்கல்

மக்களவையில் தேவேந்திர குல வேளாளர் மசோதா தாக்கல்

கோப்புப்படம்

கோப்புப்படம்

தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2020 டிசம்பரில் தெரிவித்தார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில் 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என பொதுப் பெயரில் அழைப்பதற்கான சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாநில பட்டியலினத்தில் உள்ள தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட வேண்டும் என்று அந்த சமூகத்தினர் மற்றும் புதிய தமிழகம் கட்சி மற்றும் தலித் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இதுதொடர்பாக, கடந்த 2019 மார்ச் மாதம், ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் தமிழக அரசு நியமித்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்களை இனி தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2020 டிசம்பரில் தெரிவித்தார்

இந்நிலையில், தமிழக அரசின் இந்த பரிந்துரையை ஏற்று, 7 பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று பொதுப் பெயரிட வழி செய்யும் சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இருப்பினும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்படும் இந்த திருத்தம் தமிழகத்திற்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தேவேந்திர குல வேளாளர் மசோதா, பட்ஜெட் கூட்டத் தொடரின் அடுத்த அமர்வில் விவாதத்திற்கு வரும் என எதிபார்க்கப்படுகிறது அத்துடன், மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றபின் சட்டம் அமல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Lok sabha