• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அரசியலில் அடியெடுத்து வைக்கும் பிரபல அரசியல் குடும்பத்தின் 7வது வாரிசு...

அரசியலில் அடியெடுத்து வைக்கும் பிரபல அரசியல் குடும்பத்தின் 7வது வாரிசு...

Suraj Revanna

Suraj Revanna

சூரஜுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமானால் தேவகவுடாவின் குடும்பத்தின் 7வது வாரிசாக அவர் களமிறங்குவார்..

  • Share this:
எதிர்வரும் தேர்தலில் பிரபல அரசியல் குடும்ப வாரிசும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான சூரஜ் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் அவரின் குடும்பத்தைச் சேர்ந்த 8வது உறுப்பினர் அரசியலுக்கு வரவிருப்பதாக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதமரான தேவகவுடாவின் குடும்பம் மிகப்பெரிய அரசியல் குடும்பமாக விளங்குகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனரும் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் தந்தையுமான தேவகவுடாவின் மகன்கள், பேரன்கள், என ஏற்கனவே குடும்ப உறுப்பினர்கள் 7 பேர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது புதியதாக அவரின் பேரன் ஒருவர் தேர்தல் அரசியலுக்குள் 8வதாக அடியெடுத்து வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடக சட்டமேலவையின் 25 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் நிறைவடைய இருக்கும் நிலையில் காலியாக இருக்கும் 25 இடங்களுக்கான தேர்தல் வரும் டிசம்பர் 10ம் தேதி நடத்தப்பட இருக்கிறது. இதில் தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணாவின் இரண்டாவது மகனும் மருத்துவருமான சூரஜ் ரேவண்ணாவை (வயது 34) களமிறக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இவரின் மூத்த சகோதரரான பிராஜ்வல் ரேவண்ணா ஹசன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர், இவரின் தந்தை ஹெச்.டி.ரேவண்ணா தற்போது எம்.எல்.ஏவாக உள்ளார். அவர் முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: மொபைலில் சத்தமாக பாட்டு கேட்கும் பயணிகளை பேருந்தை விட்டு இறக்கிவிடலாம் - உயர்நீதிமன்றம் அதிரடி

தேவகவுடாவின் சொந்த ஊரான ஹசன் மாவட்ட அளவில் மட்டும் தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் சூரஜுக்கு ஹசன் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என கூறப்படும் நிலையில் சூரஜின் தாயாரான பவானி ரேவன்னாவுக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தந்தை ரேவண்ணா வெற்றி பெற்றதில் மகன் சூரஜின் பங்கு அளப்பரியதாக இருந்ததாகவும் அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும், கட்சி நிகழ்ச்சிகளிலும், கட்சி பிரமுகர்களின் வீட்டு நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொண்டு விடுவார் எனவும் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

Also read: வருடத்தில் ஒரு வாரம் மட்டுமே திறக்கப்படும் அபூர்வ  கோவில்.. விநோத வேண்டுதல்களுடன் உண்டியலில் கிடந்த கடிதங்கள்...

தேவகவுடா தற்போது தீவிர அரசியலில் இருந்து விலகி விட்டாலும் அவரின் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தீவிர அரசியலில் இருந்து வருகின்றனர். சூரஜுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமானால் தேவகவுடாவின் குடும்பத்தின் 7வது வாரிசாக அவர் களமிறங்குவார்..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: