தேவே கவுடாவுக்கு உறுதியான தொகுதி... மிரட்டல் விடுக்கும் சிட்டிங் காங். எம்.பி...!

Lok Sabha Elections 2019 | தனது ஆதர்ச தொகுதியான ஹாசனில் பேரன் ப்ரஜ்வால் ரேவன்னாவை தேவே கவுடா நிறுத்தியுள்ளார்.

news18
Updated: March 23, 2019, 7:45 PM IST
தேவே கவுடாவுக்கு உறுதியான தொகுதி... மிரட்டல் விடுக்கும் சிட்டிங் காங். எம்.பி...!
தேவகவுடா
news18
Updated: March 23, 2019, 7:45 PM IST
மஜத கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவே கவுடா கர்நாடகாவின் தும்கூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தொகுதியின் சிட்டிங் காங்கிரஸ் எம்.பி போட்டி வேட்பாளராக களமிறங்க உள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில், வரும் மக்களவை தேர்தலிலும் இரு கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தொகுதி ஒதுக்குவதில் தொடங்கி, கோஷ்டி பூசல், போட்டி வேட்பாளர் என்று பல பிரச்னைகளை கடந்து ஒரு வழியாக இரு கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகின.

மதச்சார்பற்ற ஜனதாதள தேசியத் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவே கவுடா வரும் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற சந்தேகமும் இருந்தது. தனது ஆதர்ச தொகுதியான ஹாசனில் பேரன் ப்ரஜ்வால் ரேவன்னாவை அவர் நிறுத்தியுள்ளார்.

எனினும், அவர் வேறு தொகுதியில் போட்டியிடுவது உறுதியானது. அவருக்கான தொகுதியை தேர்வு செய்வதிலும் இழுபறி நீடித்த நிலையில், தும்கூர் தொகுதியில் தேவே கவுடா போட்டியிடுவதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரமேஷ் பாபு அறிவித்துள்ளார்.

தும்கூர் தொகுதி மஜதவுக்கு ஒதுக்கப்பட்டாலும், தற்போது சிட்டிங் எம்.பியாக இருக்கும் காங்கிரசைச் சேர்ந்த முட்டஹனுமே கவுடா, தான் வேட்பு மனு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளார். இதனால், அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் மாநில தலைமை இறங்கியுள்ளது.

Also See...

First published: March 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...