காங்கிரஸ் எம்.பி வேட்புமனுத் தாக்கல் செய்த தொகுதியில் தேவகவுடா! கர்நாடாவில் குழப்பம்

தும்குர் தொகுதியில்தான் எனக்கு செல்வாக்கு அதிகம் என்று கூறி தும்கூரில் மீண்டும் காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

news18
Updated: March 25, 2019, 9:49 PM IST
காங்கிரஸ் எம்.பி வேட்புமனுத் தாக்கல் செய்த தொகுதியில் தேவகவுடா! கர்நாடாவில் குழப்பம்
தேவகவுடா
news18
Updated: March 25, 2019, 9:49 PM IST
கர்நாடக மாநிலம் தும்குர் தொகுதியில் போட்டியிடுவதற்காக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சார்பில் தேசியத் தலைவர் தேவகவுடா வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

கர்நாடகத்தில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளுக்கு இருகட்டமாக ஏப்ரல் 18, 23-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலை காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்கொள்கின்றன.

இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டு காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 8 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

தேவகவுகடாவின் பிரதான தொகுதியான ஹஸ்ஸன் தொகுதியை, அவரது பேரன் பிரஜ்வால் ரேவன்னா போட்டியிடுவதற்காக, அவர் விட்டுக் கொடுத்துள்ளார்.

மற்றொரு, தொகுதியான மாண்டியாவை மற்றொரு பேரனுக்கு விட்டுக் கொடுத்துள்ளார். அதனையடுத்து, தொகுதி உடன்பாட்டில் காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டிருந்த தும்குர் தொகுதியை துணை முதல்வர் பரமேஸ்வரா மூலம் பேசி, தேவகவுடா பெற்றார்.இதனால், தேவேகவுடாவுக்கு முன்னர் ஒதுக்கப்பட்ட வடக்கு பெங்களூரு தொகுதியில் போட்டியிட முட்டாஹனுமேகவுடாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஒப்புக் கொள்ளாத முட்டாஹனுமேகவுடா, தும்குர் தொகுதியில்தான் எனக்கு செல்வாக்கு அதிகம் என்று கூறி தும்குரில் மீண்டும் காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
Loading...
இந்தநிலையில், இன்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் தேவகவுடா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.  அவர் வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது காங்கிரஸின் மூத்த தலைவரும் கர்நாடக மாநில துணை முதல்வருமான பரமேஸ்வரா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு பேசிய தேவகவுடா, ‘நாங்கள் இப்போது இணைந்துள்ளோம். கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளோம். மக்களவைத் தேர்தலிலும் சேர்ந்து தேர்தலைச் சந்திப்போம்.

நமக்கிடையே ஏற்படும் சிறிய விஷயங்கள் பெரிய விவகாரங்களாக காட்டப்படுகின்றன. நான் இணைந்து செயல்படவேண்டும். மதவாத பா.ஜ.கவுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்து போராட வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்து தெரிவித்த காங்கிரஸ் சார்பில் தும்குர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள காங்கிரஸ் எம்.பி முட்டாஹனுமேகவுடா, ‘காங்கிரஸ் உறுப்பினராகத் தான் நான் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளேன். விளையாட்டுக்காக நான் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.

நான், தும்குரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர். மற்றதொகுதிகளில் போட்டியிடுவதற்கு எனக்கு செல்வாக்கு இல்லை. நான் ஒன்றும் பெரிய தலைவர் இல்லை’ என்று தெரிவித்தார்.

கூட்டணியை மீறி, மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் நிர்வாகிகள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திவருகின்றனர். பா.ஜ.க சார்பில் பசவராஜ் போட்டியிடுகிறார்.

Also see:

First published: March 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...