சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு மேல்முறையீடு செய்யாது என கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயன் அறிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு, 10 முதல், 50 வயது வரையிலான பெண்கள் செல்லக் கூடாது என பல ஆண்டுகளாகவே கட்டுப்பாடு உள்ளது. இங்கு எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க அரசுக்கு ஆட்சேபனை இல்லை என கேரள அரசு சமீபத்தில் தெரிவித்தது. இது தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, கன்வில்கர், சந்திரசூட், நாரிமன், இந்து மல்ஹாத்ரா அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். திருவாங்கூர் தேவஸம் போர்டு இந்தத் தீர்ப்பு பாரம்பரியமிக்க கோயிலின் புனிதத்தை கெடுக்கிறது என்று கூறியுள்ளது. இந்நிலையில் தீர்ப்பை எதிர்த்து திருவாக்கூர் தேவஸம் போர்டு சீராய்வு மனுத் தாக்கல் செய்ய போவதாகவும் அறிவித்தது. இந்நிலையில் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு மேல்முறையீடு செய்யாது என கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயன் அறிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chief Minister Pinarayi Vijayan, Devaswom Board, Sabarimala Verdict