சபரிமலைக்குள் பெண்களை அனுமதிக்கலாம்! உச்ச நீதிமன்றத்தில் தேவசம்போர்டு ஒப்புதல்

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுசீராய்வு செய்யவேண்டும் என்றும் 64 அமைப்பினர் உச்ச நீதிமன்றம் மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

சபரிமலைக்குள் பெண்களை அனுமதிக்கலாம்! உச்ச நீதிமன்றத்தில் தேவசம்போர்டு ஒப்புதல்
கோப்புப்படம் (சபரிமலை)
  • News18
  • Last Updated: February 6, 2019, 3:11 PM IST
  • Share this:
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்துவயது பெண்களையும் அனுமதிக்கத் தயாராக உள்ளோம் என்று கோவிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சபரிமலையிலுள்ள ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.

மேலும், சபரிமலை கோயிலை நிர்வகிக்கும் தேவசம்போர்டும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுசீராய்வு செய்யவேண்டும் என்றும் 64 அமைப்பினர் உச்ச நீதிமன்றம் மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.


அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது, கேரள அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘அரசியல்சாசனத்தை குலைக்கும் எதுவானாலும் அதனை அனுமதிக்க முடியாது. மத நம்பிக்கைகளில் நீதிமன்றம் தலையிடலாம்’ என்று வாதிட்டார்.

தேவசம்போர்டு சார்பில், ‘சபரிமலையில் பெண்கள் வழிபடக் கூடாது என்று எந்தக் குறிப்புகளும் இல்லை. எனவே, சபரிமலைக்குள் அனைத்துவயது பெண்களையும் அனுமதிக்கலாம்’ என்று தெரிவித்தது. பல தரப்பு வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.

Also see:
First published: February 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்