சபரிமலையில் தேவசம் போர்டு கடும் கட்டுப்பாடு விதிப்பு... வியாபாரிகள் பாதிப்பு

மண்டல பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டுள்ள நிலையிலும், குறைந்த அளவில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் டோலி தூக்கும் பணியாளர்கள், மலைப்பகுதி வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் அய்யப்ப பக்தர்கள் விரதமிருந்து இருமுடி சுமந்து செல்வது வழக்கம். கேரளா மட்டுமின்றி , தமிழகம், ஆந்திர உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் செல்வார்கள். இந்த ஆண்டு கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக வார நாட்களில் நாளொன்றுக்கு 1,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் சபரிமலை சுற்றுவட்டாரத்தில் தொழில் செய்யும் ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பம்பை பகுதியில் இருந்து சன்னிதானத்திற்கு பக்தர்களை சுமந்து செல்லும் டோலி சுமை தூக்குபவர்கள் சுமார் 2,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வயதானோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பக்தர்களை பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு அழைத்துச்சென்று திருப்பி அழைத்து வர 4,200 ரூபாய் கட்டணம் பெற்றுக்கொண்டு சுமந்துச்செல்லும் இவர்கள் இந்த 2 மாதங்களை நம்பியே உள்ளனர்.


மேலும் படிக்க...பண்டிகை முடிந்தும் பணிக்குத் திரும்பாத தொழிலாளர்கள்.. கோவையில் சிறு, குறுந்தொழில்கள் முடக்கம்..இவர்கள் மட்டுமின்றி பம்பை, எரிமேலி, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான கடைகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஆயிரக்கணக்கானோர் சபரிமலை சீசனுக்காக காத்திருந்த நிலையில், அவர்களின் வாழ்வாதாராமும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
 

கேரள அரசின் சுற்றுலா மற்றும் போக்குவரத்துறைக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தை பின்பற்றி கட்டுப்பாடுகளுடன் சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
First published: November 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading